ACTIVITIES AND ADSECONOMY

மாநில அரசின் மலிவு விற்பனை- பங்சாபுரி மேராக் வட்டாத்தில் 400 பேர் பயன் பெற்றனர்

கோம்பாக், ஜன 27- செலாயாங், பங்சாபுரி மேராக் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்று நடைபெற்ற மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட் (ஜே.இ.ஆர்.) மலிவு விற்பனைத் திட்டத்தின் வழி சுமார் 400 பேர் பயனடைந்தனர்.

மக்களின் சுமையைக் குறைப்பதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களில் ஒன்றாக இந்த மலிவு விற்பனை விளங்குவதாக தாமான் டெம்ப்ளர் தொகுதி சேவை மையத்தின் அதிகாரி ரோஸ்லி கமாருடின் கூறினார்.

இந்த விற்பனையில் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தை தொடர்ந்து நடத்தவிருக்கிறோம். இந்த அத்தியாவசிய பொருள் மலிவு விற்பனையின் வழி இந்த இவ்வட்டாரத்தைச் சேர்ந்த 2,000 பேர் வரை பயனடைய நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த மலிவு விற்பனையில் கலந்து கொள்ள பலர் காலை 8.00 மணி முதல் வரிசையில் காத்திருந்தனர். மேலும் பலர் பஸ் போன்ற பொது போக்குவரத்தைப் பயன்படுத்தியும் இங்கு வந்திருந்தனர்.

இந்த மலிவு விற்பனை தொடரப்பட வேண்டும் என்பதோடு மேலும் அதிகமான பொருள்களுடன் இது விரிவாக்கம் காண வேண்டும் என்று பொது மக்களின் விருப்பமாக உள்ளது அவர் குறிப்பிட்டார்.

மேலும் அதிகமாக வகையான பொருட்களுடன் அடிக்கடி இந்த மலிவு விற்பனை நடத்தப்பட வேண்டும் என்ற பொது மக்களின் எதிர்பார்ப்பை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் பரிசீலிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.


Pengarang :