ECONOMYMEDIA STATEMENT

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் இன்று ஒற்றுமைப் பொங்கல்- பொது மக்கள் திரளாக பங்கேற்க அழைப்ப

கிள்ளான், ஜன 29- செந்தோசா சட்டமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் ஒற்றுமைப் பொங்கல் விழா இன்று மாலை 4.00 மணி தொடங்கி தாமான் ஸ்ரீ மேவா, ஜாலான் முகமது தாஹிர் ஆஃப் ஜாலான் சுங்கை ஜாத்தியில் உள்ள செந்தோசா தொகுதி சேவை மைய வளாகத்தில் வெகு சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. 

இந்த பொங்கல்  விழாவையொட்டி பல்வேறு பாரம்பரிய மற்றும் கலை,  கலாசார நிகழ்வுகளுக்கும் போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணரஜ் ஜோர்ஜ் கூறினார்.

இந்நிகழ்வையொட்டி விரைவாக பொங்கலிடுதல், பொங்கல் பானையை அலங்கரித்தல், தோரணம் பின்னுதல், கோலமிடுதல், சேலை கட்டுதல், கோலாட்டம், உறியடி உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

இதுதவிர, சிறப்பு பாரம்பரிய நடன மற்றும் கலைப்படைப்புகளும் அதிர்ஷ்டக் குலுக்கலும் இந்நிகழ்வில் இடம்பெறும். இங்கு நடைபெறும் போட்டிகளில் வெல்வோர் கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்வதற்குரிய வாய்ப்பினைப் பெறுவர் என்றார் அவர்.

தமிழர்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழாவின் மகத்துவத்தை சமூகத்தின் அனைத்து நிலையிலான மக்களுக்கும் உணர்த்தும் நோக்கில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இது தவிர, ஒருவரை ஒருவர் நேசிப்பது, அன்பு காட்டுவது, பரஸ்பரம் உதவிக் கொள்வது போன்ற நற்குணங்களை இளையோர் மத்தியில் ஏற்படுத்துவதையும் இந்த விழா நோக்கமாக் கொண்டுள்ளது என்று குணராஜ் தெரிவித்தார்.

இந்த விழாவில் தொகுதி மக்கள் திரளாக கலந்து  சிறப்பிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :