ALAM SEKITAR & CUACAECONOMY

துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள கே.டி.இ.பி.டபள்யு.எம். குழுவினர் ஜோகூர் பயணம் 

ஷா ஆலம், மார்ச் 9- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்திற்கான சிலாங்கூர் மாநில அரசின் இரண்டாம் கட்ட உதவிப் பயணத்தின் ஒரு பகுதியாக கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் தனது குழுவினரை நேற்று லாபிஸ் நகருக்கு அனுப்பியது.

அம்மாநிலத்தில் வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் கித்தா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் கீழ் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் இருபது உறுப்பினர்கள் மற்றும் ஐந்து குப்பை அகற்றும் லோரிகள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதாக அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

வெள்ளத்திற்குப் பிந்தைய துப்புரவுப் பணிகளை மேற்கொள்வது எங்களைப் பொறுத்த வரை புதிய அனுபவம் அல்ல. கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் சிலாங்கூரில் ஏற்பட்ட வெள்ளத்தில் அப்பணியை செவ்வனே மேற்கொண்டுள்ளோம் என அவர் சொன்னார்.

எங்களின் இந்த துப்புரவுப் பணியின் வாயிலாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்நோக்கும் சிரமத்தை குறைக்க முடியும் என நம்புகிறோம் என்று  அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஜோகூர் மாநிலத்தில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக இரண்டாம் கட்ட கித்தா சிலாங்கூர் பென்யாயாங் உதவிப் பயணத்தை மாநில அரசு இன்று மேற்கொள்ளும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.

கடந்த 4ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட முதலாம் கட்ட கித்தா சிலாங்கூர் பென்யாயாங் உதவிப் பயணத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவுப் பொட்டலங்கள், அரசி, நாப்கின், சிலிப்பர்கள், உடைகள் மற்றும் கனிம நீர் ஆகியவை அங்கு அனுப்பப்பட்டன.

 


Pengarang :