ALAM SEKITAR & CUACAECONOMY

வெள்ளம் பாதித்த ஒன்பது பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் சிலாங்கூர் தன்னார்வலர்கள் தீவிரம்

லாபிஸ், மார்ச் 9- லாபிஸ் மாவட்டத்தில் வெள்ளத்திற்கு பிந்தைய துப்புரவு பணிகளில் தீவிரம் காட்டி வரும் சிலாங்கூர் தன்னார்வலர்கள், இங்குள்ள ஒன்பது பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு வெள்ள நிலைமை சீரடைந்து வரும் நிலையில் வெள்ள நீரில் சேதமடைந்துள்ள மரத்தளவாடங்கள், மெத்தைகள், டயர்கள், உள்ளிட்ட பொருள்களை பொருள்களை அப்புறப்படுத்த வேண்டியுள்ளது என்று மனுக்குல மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

பொது இடங்கள் மற்றும் வீடமைப்புப் பகுதிகளில் குவிந்துள்ள இத்தகைய பொருள்களை முடிந்தவரை வெளியேற்றுவது இந்த உதவிப் பயணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என்று அவர் தெரிவித்தார்.

லாபிஸ் மாவட்ட மன்ற அலுவலகத்தில் உள்ள வெள்ள பேரிடர் நடவடிக்கை அறையில் கித்தா சிலாங்கூர் பென்யாயாங் 2.0 குழுவினருக்கு விளக்கமளித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள தமது தரப்பு தயாராக உள்ளதாகவும் எனினும், தேவையின் அடிப்படையில் அத்தகைய உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

பொது இடங்களைத் துப்புரவு செய்வதற்கு எங்களுக்கு மூன்று தினங்கள் உள்ளன. வீடுகளைத் துப்புரவு செய்ய கோரிக்கை விடுக்கப்படும் பட்சத்தில் சிலாங்கூர் தன்னார்வலர்கள் (செர்வ்) மற்றும் டீம் சிலாங்கூர் குழுவினரை அங்கு அனுப்புவோம் என்றார் அவர்.

இந்த மூன்று நாள் துப்புரவுப் பணியின் போது பல சவால்களை குறிப்பாக வட்டார மக்களிடமிருந்து எதிர்பார்ப்புகளை சந்திப்பதற்கான சாத்தியம் உள்ளதையும்  அவர் கோடி காட்டினார்.

சாலைகளில் போதுக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வட்டார மக்களின் எதிர்ப்பு எங்களுக்கு பெரும் சவாலாக இருக்க க்கூடும் என கருதுகிறோம். தங்கள் பகுதியில் ஆங்காங்கே குழிகள் தோண்டப்படுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்றார் அவர்.


Pengarang :