SELANGOR

சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மைய பயிற்சியில்  (எஸ்டிடிசி) 30 ஆதரவற்றோர் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், மார்ச் 22: யாயாசன் இஸ்லாம் டாருல் எஹ்சான் (யீட்) மேற்பார்வையில் மொத்தம் 30 ஆதரவற்றோர் மார்ச் மாதம் சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையத்தில் (எஸ்டிடிசி) பயிற்சி திறன் திட்டத்தில் கலந்து கொண்டனர்,

அவர்கள் மின்சாரம், மோட்டார் சைக்கிள்கள், ஏர் கண்டிஷனிங், ஆட்டோமோட்டிவ் மற்றும் கணினி அமைப்புகள் போன்ற திறன் படிப்புகளில் படிப்பைத் தொடங்கும் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இக்திசாஸ் ஸ்மார்ட் சிலாங்கூர் (Iktisass) மூலம் அவர்களுக்குக் கல்வி மற்றும் தங்கும் செலவுகளுக்கு நிதி அளிக்க பட்டதாகவும், 6 முதல் 12 மாதங்கள் வரையிலான படிப்பு முழுவதும் மாணவர்களுக்கு மாதந்தோறும் RM300 வாழ்வாதார உதவியாக வழங்கப்படும் என்றும் முகமட் கைருடின் ஓத்மான் கூறினார்.

“எனவே வேலையின்மை விகிதத்தை கட்டுப்படுத்தும் அதே வேளையில் மனித மூலதன பிரச்சனையைத் தீர்க்க இந்த திட்டம் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கூறினார்..

இதற்கிடையில், சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) மற்றும் மாரா டெக்னாலஜி பல்கலைக்கழகம் (யுஐடிஎம்) ஆகியவற்றுடன் இணைந்து அவர்களுக்குத் திறன்களைத் தவிர வேறு திட்டங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் முகமட் கைருடின் கூறினார்.

“ஒருவேளை அவர்களில் சிலருக்குக் கல்வித் துறையில் அதிக ஆர்வம் இருக்கும். “இதை பரிசீலிக்க டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் நான் விவாதிப்பேன்” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :