ECONOMYMEDIA STATEMENTSELANGOR

RM65.6 மில்லியன் ஒதுக்கீடு, ஆறு பொது சுகாதார முயற்சிகளில்  அரசு கவனம் செலுத்துகிறது

ஷா ஆலம், ஏப்ரல் 7: மனநல சுகாதாரம் ‘’கேசிஹத்தன் மென்டல்’’ மற்றும் முதியோர் நலம் ‘’பெனுவான் சிஹாட்’’  ஆகியவை இந்த ஆண்டு சிலாங்கூர் பொது சுகாதார முன்முயற்சியின் ஆறு அம்சங்களில் ஒன்றாகும் என்று பொது சுகாதார EXCO தெரிவித்துள்ளது.
மனநல சுகாதாரம் ‘’கேசிஹத்தன் மென்டல்’’ மற்றும் முதியோர் நலம் ‘’பெனுவான் சிஹாட்’’ ஹிடுப் ராக்யாட்  முக்கிய முயற்சிக்காக RM65.6 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறினார்.

“மேலும், தொற்றா நோய்கள் இருதய நோய், சிறுநீரகம், இனிப்பு நீர், இரத்த அழுத்தம்  மற்றும் காச நோய் ,டிங்கியை தவிர்த்து  புற்றுநோய் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து  குறைவு” போன்றவற்றிலும் மாநிலம்   கவனம் செலுத்துவதாக  உலக சுகாதார தினத்தை ஒட்டிய  அவரின்  பேஸ்புக்கில்  அறிக்கையில் கூறினார்.
“சிலாங்கூர் மக்கள் எந்தப் பின்னணியில் இருந்தாலும் நல்ல சுகாதார சேவையை அணுக முடியும் என்பதை உறுதி செய்வதாக”  அவர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சுகாதார தினம் குறித்து, இது மனித வாழ்க்கையை பாதிக்கும் சுகாதார பிரச்சினைகள் குறித்து உலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆகும்.
“உலக சுகாதார தினம், சுகாதார அதிகாரிகளால் செயல்படுத்தப்பட்ட பொது சுகாதாரத் திட்டங்களை பற்றி உள்ளூர் சமூகம் அறிந்து கொள்வதற்கான இடத்தையும் வழங்குகிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :