ECONOMYMEDIA STATEMENT

பூச்சோங்கில் புயல்காற்றில் விழுந்த மரங்களை எம்.பி.எஸ்.ஜே. விரைந்து அகற்றியது

ஷா ஆலம், ஏப் 28- புயல் காற்றினால் தனது அதிகார வரம்பிற்குட்பட்ட பகுதிகளில் விழுந்த மரங்களை சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஜே.) விரைவு பணிக்குழுவினர் அகற்றினர்.

நேற்று பெய்த கனத்த மழையுடன் கூடிய புயல்காற்றின் காரணமாக எண்.22 ஜாலான் எஸ்பி 1/7 சவுஜானா பூச்சோங் மற்றும் எண்.26 ஜாலான் பிபி 2/9 புக்கிட் பூச்சோங் ஆகிய இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக மாநகர் மன்றம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட ஆறு உறுப்பினர்கள் அடங்கிய பந்தாஸ் விரைவு பணிக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர் என்று அது குறிப்பிட்டது.

கடும் மழை காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்ட கம்போங் கோல சுங்கை பாரு மற்றும் கம்போங் கெனாங்கான் பூச்சோங் பகுதிகளுக்கும் இக்குழுவினர் வருகை மேற்கொண்டு நிலைமையைக் கண்காணித்தனர்.

அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் 03-80247700 என்ற எண்களில் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளும்படி பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


Pengarang :