EKSKLUSIFMEDIA STATEMENT

புத்தரின் போதனைகளை பௌத்தர்கள் நினைவுப்படுத்தும் உன்னத தருணம்- மந்திரி புசாரின் விசாக தின வாழ்த்து

ஷா ஆலம், மே 4- இன்று விசாக தினத்தைக் கொண்டாடும் மலேசியாவில் குறிப்பாக சிலாங்கூரில் வசிக்கும் பௌத்தர்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பிரகாசத்தையும் கௌதம புத்தரின் மறைவையும் குறிக்கும் இந்த தினம் பௌத்த சமயத்தினருக்கு பொருள் பொதிந்த ஒரு திருநாளாக விளங்குவதாக அவர் கூறினார்.

புத்த ஜெயந்தி அல்லது புத்த பௌர்ணமி என அழைக்கப்படும் இந்த திருநாள் இந்தியா, நேப்பாளம் மங்கோலியா, திபேத் உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

விசாகம் என்பது பாலி மொழியிலிருந்து மருவிய சிங்கள வார்த்தை எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களைக் குறிக்கும் சமஸ்கிருத வார்த்தையான வைசாகாவிலிருந்து மறுவி விசாகமாகியதாக குறிக்கவும் படுகிறது..

வழக்காக, பௌத்த மதத்தினர் இன்றைய தினத்தில் காலையில் பௌத்த ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் அதே வேளையில் உறுதிமொழியையும் புத்தரின் போதனைகளையும் புதுப்பித்துக் கொள்வதற்குரிய தருணமாகவும் இந்நாளைப் பயன்படுத்திக் கொள்வர் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.


Pengarang :