ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பெட்டாலிங் ஜெயா தொகுதி சேவை மையத்தை மந்திரி புசார் திறந்து வைத்தார்

பெட்டாலிங் ஜெயா, மே 13- பொது மக்களுக்கு சேவை வழங்கும் நோக்கில்  இங்குள்ள ஜாலான் ஓத்மானில் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதியின் சேவை மையம் அமைக்கப் பட்டுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தாம் வெற்றி பெற்றது முதல் நிலையான சேவை மையம் இல்லாத நிலையில் நடமாடும் சேவை மையத்தின் வாயிலாக மக்களுக்கு உதவிகளை புரிந்து வந்ததாக தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியேன் சுங் கூறினார்.

முன்பு நான் ஆங்காங்கே சென்று மக்களைச் சந்தித்து வந்தேன். இதனால் மக்கள் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த அலுவலகம் மூலம் சேவையை முறையாக மேற்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

கேந்திர முக்கியத்துவம் கருதி இந்த இடத்தை தாம் தேர்ந்தெடுத்ததாக கூறிய அவர், ஜாலான் ஓத்மான் பஸ் நிலையம் அருகில் உள்ளதால் பொது மக்கள் தமது சேவையை பயன்படுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பு எளிதாக கிட்டும் என்றார் அவர்.

இந்த சேவை மையத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த சேவையை மையம் இன்று தொடங்கி காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திறந்திருக்கும்.

கெஅடிலான் கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குநருமான லீ கடந்த பொதுத் தேர்தலில் 50,575 வாக்குகள் பெரும்பான்மையில் பெட்டாலிங் ஜெயா தொகுதியில் வெற்றி பெற்றார்.


Pengarang :