ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

புக்கிட் செராக்காவில் உடைந்த குழாயைப் பழுதுபார்க்கும் பணி நாளை தொடங்கும்

ஷா ஆலம், மே 21- பண்டார் புஞ்சா ஆலம், ஜாலான் புக்கிட் செராக்காவில் உடைந்த குழாயை பழுதுபார்க்கும் பணி நாளை காலை 9.00 முதல் மேற்கொள்ளப்படும் என்று பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

இந்த பழுதுபார்ப்புப் பணிகள் காரணமாக ஷா ஆலம் மற்றம் கோல சிலாங்கூரில் பாதிப்புக்குள்ளான 99 இடங்களில் நீர் விநியோகம் வரும் புதன் கிழமை இரவு 9.00 மணியளவில் முழுமையாக வழக்க நிலைக்குத் திரும்பும் என அது தெரிவித்தது.

இந்த பழுதுபார்ப்பு பணிகள் வரும் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விடியற்காலை 3.00 மணியளவில் முற்றுப் பெறும் என்றும் அந்நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.

அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான மருத்துவமனை, கிளினிக், டயாலிசிஸ் மையங்கள் மற்றும் நல்லடக்கச் சடங்கு நடைபெறும் வீடுகளை இலக்காகக் கொண்டு லோரிகள் மூலம் நீரை விநியோகிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் அந்த பதிவு கூறியது.

கீழே பட்டியலிடப்பட்ட நான்கு ஓரிட சேவை மையங்கள் வாயிலாகவும் பொது மக்கள் மாற்று குடிநீர் சேவையைப் பெறலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, நீர் விநியோகத் தடையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக போதுமான அளவு நீரை சேகரித்து வைத்துக் கொள்ளும் அதேவேளையில் நீரை சிக்கனமாகவும் பயன்படுத்தும்படி பொது மக்களுக்கு ஆயர் சிலாங்கூர் நிறுவனம் ஆலோசனை கூறியது.


Pengarang :