MEDIA STATEMENTNATIONAL

பேரரசரின் பிறந்த நாளை முன்னிட்டு 839 பேர் உயரிய விருதுகளைப் பெற்றனர்

கோலாலம்பூர், ஜூன் 5- மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவின் அதிகாரப்பூர்வ பிறந்த நாளை முன்னிட்டு 839 பேர் கூட்டரசு அரசின் உயரிய விருதுகள், பட்டங்கள் மற்றும் பதக்கங்களைப் பெற்றனர்.

விருதுகள் பெறுவோர் பட்டியலில் மக்களவை சபாநாயகர் டத்தோ ஜோஹாரி அப்துல் முதலிடம் வகிக்கிறார். அவருக்கு டான்ஸ்ரீ அந்தஸ்து கொண்ட பங்ளிமா செத்தியா மக்கோத்தா (பி.எஸ்.எம்) விருது வழங்கப்பட்டது.

மூத்த அரசியல்வாதி லிம் கிட் சியாங், சபா, சரவா தலைமை நீதிபதி டத்தோ அப்துல் ரஹ்மான் சிபில், கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ நளினி பத்மநாபன், பட்டர்சீ பவர் ஸ்டேஷன் கம்பெனி லிமிடட் தலைவர் டத்தோ ஜெகநாத் டேரக் ஸ்டீவன் சபாபதி, உள்பட 25 பிரமுகர்கள் இந்த பி.எஸ்.எம். விருதைப் பெறுகின்றனர்.

இதனிடையே டத்தோ அந்தஸ்தை தாங்கி வரும் பங்ளிமா ஜாசா நெகாரா (பி.ஜே.என்.) விருது பிரபல உள்நாட்டுக் கலைஞர் டி.ஜே. டேவ் உட்பட 28 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பங்ளிமா செத்தியா டி ராஜா (பி.எஸ்.டி.) விருதை நால்வரும் ஜோஹான் மங்கு நெகாரா விருதை (ஜே.எம்.என்.) 33 பேரும் ஜோஹான் செத்தியா மக்கோத்தா (ஜே.எஸ்.எம்.) விருதை 33 பேரும் ஜே.எஸ்.டி. எனும் ஜோஹான் செத்தியா டிராஜா விருதை மூவரும்  பெறுகின்றனர்.


Pengarang :