ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

கிள்ளானில் திடீர் வெள்ளம் காரணமாக 78 பேர் நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்தனர்

ஷா ஆலம், ஜூன் 5- திடீர் வெள்ளம் காரணமாக கிள்ளான் பண்டார் புக்கிட் ராஜாவைச் சேர்ந்த 78 பேர் பண்டார் புக்கிட் ராஜா பள்ளிவாசலில் நேற்று அதிகாலை அடைக்கலம் புகுந்தனர்.

பல மணி நேரத்திற்கு நீடித்த மழையின் காரணமாக தங்கள் வீடுகள் 0.5 மீட்டர் வெள்ளத்தில் மூழ்கியதைத் தொடர்ந்து 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்ததாக மாநில பேரிடர் மேலாண்மைக் பிரிவின் நிர்வாகச் சேவை செயலாளர் கூறினார்.

மழை நீருடன் கடல் பெருக்கும் ஒன்று சேர வெள்ளம் வெகு விரைவாக வீடுகளில் புகுந்தது. அதே சமயம் ஆற்றிலும் நீர் மட்டம் உயர்ந்ததால் வடிகால்களால் அதிக நீரை விரைந்து வெளியேற்ற இயலாத நிலை ஏற்பட்டது என்று முகமது ஹனாபி அகமது கூறினார்.

வெள்ளம் காரணமாக 27 ஆண்கள், 30 பெண்கள், 10 சிறுவர்கள் மற்றும் 11 சிறுமிகள் நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

இன்று வானிலை தெளிவாக காணப்படுவதோடு கடல் பெருக்கு ஏற்படுவதற்கான அறிகுறியும் தென்படாததால் நிவாரண மையத்தில் தங்கியுள்ளவர்வர்கள் இன்று மாலை தொடங்கி வீடு திரும்பத் தொடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.

அதிகாலையில் பெய்த அடை மழையின் காரணமாக கிள்ளான் வட்டாரத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கூறினார்.


Pengarang :