SELANGOR

கியாம்பாங் என்னும் தாவர பெருக்கத்தைச்  சமாளிக்கக் கடுமையான அமலாக்க நடவடிக்கை –  பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 6: கிளானா ஜெயாவில் உள்ள இரண்டு ஏரிகளில் கியாம்பாங் தாவர இனப்பெருக்கம் செய்யும் பிரச்சனையை சமாளிக்க பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) அமலாக்க நடவடிக்கையைக் கடுமையாக்கி உள்ளது.

ஏரியில் செடிகளை வீசும் பொறுப்பற்ற நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதன் மேயர் முகமட் அஸான் முகமட் அமீர் தெரிவித்தார்.

குளோமெக் கட்டிடத்திற்கு அருகிலுள்ள சமூக ஏரி மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஸ்டேடியத்திற்கு அருகிலுள்ள பண்டாரன் ஏரி ஆகியவற்றிலும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

“பொதுமக்கள் குறிப்பாகக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது அசம்பாவிதங்களை  தவிர்க்க, கியாம்பாங் நாவரங்கள்  பெருக்கத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

“சம்பந்தப்பட்ட இரண்டு ஏரிகளை நிரப்பும் கியாம்பாங் தாவாரம் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும், ஏனெனில் தூரத்திலிருந்து இது ஒரு பசுமையான திடல் போல் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.

பிலான் பிஜே என்பது பெட்டாலிங் ஜெயாவில் அழகான, வசதியான, பாதுகாப்பான மற்றும் வளமான சூழலை உருவாக்க ஐந்தாண்டு காலத்தை உள்ளடக்கிய ஒரு செயல் திட்டமாகும்.


Pengarang :