SELANGOR

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றப் பகுதியில் 25 விழுக்காடு பசுமைப் பகுதி உருவாக்கம்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 7- தனது அதிகார வரம்பிற்குட்பட்ட 97.2 சதுர
கிலோமீட்டரில் 25 விழுக்காட்டுப் பகுதியைச் பசுமை வளாகமாகப்
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் உருவாக்கியுள்ளது.

துரித வளர்ச்சி கண்டு வரும் மாநகராகப் பெட்டாலிங் ஜெயா விளங்கி
வரும் நிலையில் இந்த அடைவு நிலை தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய
வெற்றியாகும் என்று பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது
அஸான் முகமது அமிர் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா வளரச்சி கண்ட நகரம் என்பதோடு அது துரித
மேம்பாட்டையும் கண்டு வருகிறது. இருந்த போதிலும் மேம்பாட்டுத்
திட்டமிடலில் நாம் பசுமைப் பகுதிகளைத் தொடர்ந்து நிலை நிறுத்தி
வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

நீடித்த மேம்பாட்டுத் திட்டத்தின் 17 அம்ச அடிப்படையில் குறைவான
கார்பன் வெளியேற்றத்தைக் கொண்ட மாநகராகவும் வரும் 2030ஆம்
ஆண்டிற்குள் விவேக, நீடித்த மற்றும் வசிப்பதற்கு உகந்த நகராகப்
பெட்டாலிங் ஜெயாவை உருவாக்கும் 10 அமசச் செயலாக்கத் திட்டத்திற்கு
ஏற்பவும் இந்த முயற்சியைத் தாங்கள் முன்னெடுத்துள்ளதாக அவர்
சொன்னார்.

நேற்று இங்குள்ள கிளானா ஜெயாவில் பெட்டாலிங் ஜெயா வடிவமைப்பு
பெருந்திட்டம் தொடர்பான புத்தகத்தை வெளியீடு செய்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :