ACTIVITIES AND ADSECONOMY

பெண்கள் மையம் (PWB) ஏற்பாடு செய்த சும்பா பாதிக் 2023 நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

பத்தாங் காலி, ஜூன் 8: சமீபத்தில் பத்தாங் காலி தொகுதியில் அதிகாரமளிக்கப்பட்ட பெண்கள் மையம் (PWB) ஏற்பாடு செய்த சும்பா பாதிக் 2023 நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பெண்கள் ஒருவருக்கொருவர் சமூக ரீதியாகத் தொடர்புகொள்வதற்கு இடமளிப்பதுடன் அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என தொகுதி ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாவி முஹம்மது கூறினார்.  

“இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்,” என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து எதிர்காலத்திலும் தனது தரப்பு இந்நிகழ்ச்சியைத் தொடரும் என சைபுடின் ஷாபி கூறினார். 

“இத்திட்டம் செரெண்டா, சுங்கை புவயா மற்றும் புக்கிட் செந்தோசா ஆகிய இடங்களில் இம்மாதம் வரை தொடரும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சும்பா பாதிக் 2023 நத்ரா அலியின் நெருக்கமான ஒத்துழைப்போடு சின் தினா மற்றும் சின் விசா ஆகியோரால் வழிநடத்தப்பட்டது மற்றும் அவரது குழுவினர் 15 அதிர்ஷ்டசாலிகளுக்கு அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகளையும் வழங்கினர்.

 


Pengarang :