SELANGOR

எம்.பி.எச்.எஸ் ஏற்பாட்டில் 312 கிலோ பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு

கோல குபு பாரு, ஜூன் 9- உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகம்
(எம்.பி.எச்.எஸ்.) ஏற்பாடு செய்த சிடினா எனும் “காசாகும் கழிவுப் பொருள்“
எனும் திட்டத்தின் கீழ் 312.04 கிலோ பயன்படுத்தப்பட்ட சமையல்
எண்ணெய் சேகரிக்கப்பட்டது.

மொத்தம் 45 பேரிடமிருந்து கிலோ 2.50 வெள்ளி விலையில் இந்த
சமையல் எண்ணெய் வாங்கிக் கொள்ளப்பட்டதாக நகராண்மைக் கழகம்
இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

சிடினா என்பது மறுசுழற்சி செய்யக்கூடிய அனைத்துப் பொருள்களையும்
உள்ளடக்கியது. மக்கள் வருமானத்தை ஈட்டக்கூடிய மற்றும்
மறுசுழற்சிக்கு அவர்களை ஊக்குவிக்கக்கூடிய ஒரு திட்டமாக இது
விளங்குகிறது என்று நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து
வருகிறது. உலு பெர்ணம், கோல குபு பாரு, பத்தாங் காலி, புக்கிட்
பெருந்தோங் ஆகிய ஐந்து இடங்களில் உள்ள மறுசுழற்சி மையங்கள்
வயிலாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது எனவும் அது குறிப்பிட்டது.

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை பொது மக்கள் சேகரிப்பதை
தாங்கள் ஊக்குவிப்பதாகவும் அந்த எண்ணெய்யை மலேசிய செம்பனை
எண்ணெய் வாரியத்தில் பதிவு பெற்ற நிறுவனம் வாங்கிக் கொள்ளும்
என்றும் நகராண்மைக் கழகம் கூறியது.


Pengarang :