MEDIA STATEMENTSUKANKINI

தேசிய  பூப்பந்து போட்டியில் ஜுன் ஹாவ், லெட்ஷானா முதல் தேசிய பட்டங்களை வென்றனர்

கோலாலம்பூர், ஜூலை 9 – தேசிய ஆண்கள் ஒற்றையர் ஆட்டக்காரர் லியோங் ஜுன் ஹாவ் இறுதியாக இன்று  ஜுவாரா ஸ்டேடியத்தில் நடந்த 2023 தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இறுதிப் போட்டியில், மலேசியாவின் பேட்மிண்டன் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 வயதான வீரர், 45 நிமிடங்கள் நீடித்த  கடும் போட்டியில் 21 – 16, 21 – 13 என்ற  புள்ளிக்  கணக்கில் சக வீரர் முஹம்மது ஷகீம் எய்மான் ஷாயாரை தோற்கடிப்பதில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளவில்லை.

காயம் காரணமாக 2019 இறுதிப் போட்டியில் இருந்து விலகிய பிறகு, லியோங்கின் ஏமாற்றத்தை இந்த வெற்றி  ஈடுகட்டியது.

“இந்த வெற்றி எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக உள்ளது, எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகளில் அதிக பட்டங்களை வெல்வதற்கு எனது நிலைத் தன்மையை தக்க வைத்துக் கொள்வேன்” என்று உலக தரவரிசையில் 54 வது இடத்தில் உள்ள வீரர் பரிசு வழங்கும் விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் விவரித்த லியோங், இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் தலைசிறந்த 40 வீரர்களுக்குள் நுழைவார் என நம்புவதாக கூறினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர் RM10,000 மற்றும் கோப்பையைப் பெற்றார், முஹம்மது ஷகீம் RM5,000 ஐப் பெற்றார்.

 


Pengarang :