EKSKLUSIFMEDIA STATEMENTSELANGOR

 மாநில அரசு மக்களுக்காகப் பல நலத் திட்டங்களை வகுத்துள்ளது

ஷா ஆலம், ஜூலை 24: மாநில அரசு உதவி மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் மக்களுக்கு பல நலத் திட்டங்களை வகுத்துள்ளது.

காசிஹ் இபு ஸ்மார்ட் சிலாங்கூர் (கிஸ்) திட்டம் சிலாங்கூர் வளமான வாழ்க்கை உதவி (பிங்காஸ்) என்று பெயர் மாற்றப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்

பிங்காஸ் பங்கேற்பாளர்கள் மாதத்திற்கு RM300 அல்லது வருடத்திற்கு RM3,600 பெறுகிறார்கள். இதற்கு முன், கிஸ் திட்டத்தின் மூலம் மாதத்திற்கு RM200 அல்லது வருடத்திற்கு RM2,400 மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்கிம் மெஸ்ரா ஊசிய எமாஸ் (SMUE) திட்டம், ஒவ்வொரு ஆண்டும் வயதானவர்களுக்கு ஷாப்பிங் வவுச்சர்களை வழங்கும் ஸ்கிம் மெஸ்ரா இன்சான் இஸ்திமேவா திட்டமாக (SMIS) கட்டமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

“முன்பு போல் இறந்த பிறகு பணத்தை வழங்குவதற்குப் பதிலாக, வாழும் காலம் வரை முதியவர்களுக்கு ஆண்டுதோறும் ‘ஷாப்பிங்’ வவுச்சர்களை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் மேம்படுத்தப்பட்டது.

“அவதூறு மற்றும் பொய்களைப் பரப்பும் பிரிவினைவாதக் குழுக்களால் ஏமாறாதீர்கள். ஒற்றுமை அரசாங்கம் சிலாங்கூருக்குச் சிறந்த அரசாங்கம் ஆகும்” என்று அவர் ட்விட்டரில் கூறினார்.

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனாளர்கள் வாழும் வரை நலத்திட்ட உதவிகளை அனுபவிக்கும் வகையில் SMUE மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அமிருடின் கூறினார்.

இந்த திட்டத்தில் பங்கேற்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் RM150 மதிப்புள்ள ஷாப்பிங் வவுச்சர்களையும், RM500 இறப்புப் பலனையும் பெறுகிறார்கள்.


Pengarang :