ALAM SEKITAR & CUACAECONOMYEKSKLUSIF

ஸ்மார்ட் வாடகைத் திட்டத்தின் கீழ் –  2026 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 4,000 வீடுகள் வழங்கப்படும்

ஷா ஆலம், ஜூலை 25:  ஸ்மார்ட் வாடகைத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள நடுத்தர
மற்றும் வருமானம் குறைவாக பெறும் நபர்களுக்கு உதவும் நோக்கில், எதிர் வரும் 2026
ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 4,000 வீடுகள் வழங்கப்படும்.

2015ல் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது இருந்து இதுவரை பாதிக்கப்பட்ட
குழுக்களுக்கு மொத்தம் 1,000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார்
டத்தோஸ்ரீ அமிருடின் கூறினார்.

“தகுதி பெற்ற நபர்கள் இத்திட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் வாடகைக்கு இங்கு
வசிப்பார்கள், வாடகையில் இருந்து  30 சதவீத   தொகையை, வீட்டுக்கு  ஆரம்ப

வைப்புத் தொகையாக,   மீண்டும் நாங்கள் திருப்பித்  தருகிறோம்.

ஸ்மார்ட் வாடகைத் திட்டம் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு
தங்கள் சொந்த வீட்டை சொந்தம் ஆக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

புதிதாக திருமணமான தம்பதிகள் தேவைகளைப் புரிந்து கொண்ட
டத்தோ மந்திரி புசார், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிலாங்கூர் கூ திட்டம் 3.0 கீழ்
ஒன்று மற்றும் இரண்டு அறைகள் கொண்ட வீடுகளை உருவாக்கப்படும் என்றார்.

“நாங்கள் ஒரு குறுகிய இடத்தில் வாழ்க்கையை நடத்தும்  முறையை மீண்டும் கொண்டு வர விரும்பவில்லை,
ஆனால் ஒரு குழந்தை அல்லது புதிதாக திருமணமானவர்களுக்கு யதார்த்தத்தை
நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர்களுக்கு அதிக இடம் தேவையில்லை. மக்கள்
தங்கள் சொந்த வீடு என்ற கனவை அடைய நாங்கள் உதவ முயற்சிக்கிறோம்.

சிலாங்கூர் கூ திட்டம் 3.0  வீட்டுவசதிக் கொள்கையின் மூலம் சிலாங்கூர் அரசாங்கம்
60,000 குடியிருப்புகளை 2025 ஆம் ஆண்டிற்குள் உருவாக்குவதை நோக்கமாகக்
கொண்டுள்ளது.


Pengarang :