NATIONALSUKANKINI

  ஜப்பான்  ஓபன் பூப்பந்து போட்டியில் , நான்கு தேசிய இரட்டையர்கள் அணிகள் ஆரம்ப சுற்றில் வென்று அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

கோலாலம்பூர், ஜூலை 25: இப்பொழுது  டோக்கியோவில் நடைபெறும் 2023 ஜப்பான் ஓபன்  பூப்பந்து  சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க சுற்றில் மலேசியாவின் நான்கு இரட்டையர்  அணி ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை பெற்றனர்.

யோயோகி ஃபர்ஸ்ட் ஜிம்னாசியத்தில் நடந்த இப்போட்டியில், நாட்டின் முன்னணி பெண்கள் 
இரட்டையர் பேர்லி டான்-எம். தீனா   இணை 21-11, 9-21, 21-19 என்ற செட் கணக்கில் சீன ஜோடி லியு ஷெங் சு – டான் நிங்கைத் தோற்கடித்து   இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் சீனாவைச் சேர்ந்த சென் கிங் சென்-ஜியா யி ஃபேன், கனடிய 
ஜோடியான கேத்தரின் சோய்-ஜோசஃபின் வூவை தோற்கடித்தால், இரண்டாவது போட்டி பேர்லி மற்றும் தீனாவுக்கு  கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மற்ற இரண்டு மலேசிய கலப்பு இரட்டையர்களான சென் டாங் ஜீ-தோ ஈ வெய் மற்றும் சான் 
பெங் சூன்-செயா யீ சீ ஆகியோரும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

உலகத் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் டாங் ஜீ-ஈ வெய், உலகின் 9-ஆவது தரவரிசையில் உள்ள 
நெதர்லாந்தின் ராபின் டேபிலிங்-செலினா பீக் ஜோடியை 21-15, 21-18  என்ற செட் கணக்கில் வென்று  அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

சீன இரட்டையர்கள்  ஜப்பானிய இரட்டையர்களான ஹிரோகி மிடோரிகாவா  – நட்சு சைட்டோ ஜோடியை 21-8, 21-13 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது அடுத்து டாங் ஜீ-ஈ வெய் முதல் தரவரிசையில் உள்ள ஜெங் சி வெய்-ஹுவாங் யா கியோங்கை சந்திக்கின்றனர்.

மேலும் பெங் சூன்-  செயா யீ சீ  ஜோடி தாய்லாந்து ஜோடியான சுபாக்  ஜொம்கொ-  சுபிசாஸரா  வை எதிர்கொள்கிறது,


தேசிய தொழில்முறை ஆடவர் இரட்டையர் ஓங் யூ சின்-டியோ ஈ யி இன்று 36 நிமிடங்களில் 
பிரான்சின் லூகாஸ் கோர்வி-ரோனான் லாபரை 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வென்று தேசிய அணியினர் சிறப்பான ஆட்டத்தை   காட்டினர்.

ஆறாம் நிலை ஜோடி, சீனாவின் சென் போ யாங்-லியு யி அல்லது நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான  
தைவானின் லீ யாங்-வாங் சி-லின் இடையேயான தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி  காலிறுதி  ஆட்டத்தில்  எதிர்கொள்வது என்பதை   தீர்மானிக்கும்.

Pengarang :