ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

நதி நீரின் தரம் மற்றும் அளவு   ஆகியவற்றை கண்காணிக்க  – ஹைட்ரலோஜிகல் டெலிமெட்ரிக்  நிலையத்தை உருவாக்குகிறது- சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம்

ஷா ஆலம், ஜூலை 25: சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS)
மாநிலத்தில் உள்ள ஆற்றுப் படுகைகளில் உள்ள நீரின் அளவு மற்றும்
தரத்தை கண்காணிக்க ஹைட்ரலோஜிகல் டெலிமெட்ரி நிலையத்தை உருவாக்கியுள்ளது.

அந்த இடத்தில் உள்ள உண்மையான அளவீடுகளை தொடர்ந்து பதிவு

செய்ய ஆற்றோர  ஒதுக்கீடு நிலத்தில்  50 மீட்டர் பரப்பளவில் நிலையம்
அமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை செமிஞ்சி போன்ற  அச்சுறுத்தலான

துணை நதிகளின் மேல் பகுதியில் இந்த நிலையம் ஒரு முன் எச்சரிக்கை
அமைப்பாகவும் செயல்படும் என்று அவர் விளக்கினார்.
அங்கு நிறுவப்பட்ட தொழில்நுட்பம் முழுமையாகச் செயல்படுவதை உறுதி செய்ய
ஏஜென்சி டெலிமெட்ரி நிலையத்தை அடிக்கடி கண்காணிக்கும் என்று
சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் கூறியது.
அவரைப் பொறுத்தவரை, செயல்திறன் அளவுகோல்களின் படி ஒவ்வொரு
கூறுகளையும் சரிபார்த்து, குறிப்பிட்ட விவரக்குறிப்புகள் பூர்த்தி செய்வதற்கான
சோதனைகள் மேற்கொள்வதற்கு கூடுதலாக, பல நடைமுறைகள் செய்யப்படுத்த வேண்டும் என்றார்.

நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படுதல் உறுதி

செய்வதற்காக சிலாங்கூர் மாநில நீர் வளங்கள் ஆப்ஸ் தளம் மூலம் அவ்வப்போது
கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் தொடர்புடைய நிறுவனங்களுடன்
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று அவர் கூறினார்.

Pengarang :