ECONOMYMEDIA STATEMENTSI

சிலாங்கூர் அரசின் இலவச காப்புறுதித் திட்டத்தில் 52 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு

உலு லங்காட், ஆக 5- சிலாங்கூர் மாநில அரசின் இலவச பொது காப்புறுதித் திட்டத்தில் இதுவரை 52 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதன் வழி விபத்துகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து காப்புறுதி பாதுகாப்பை பெறுவதற்குரிய வாய்ப்பினை அவர்கள் பெற்றுள்ளனர்.

இன்சான் எனப்படும் இந்த இலவச காப்புறுதிக்கான கோட்டா நிறைவு பெற இன்னும் பத்து லட்சத்திற்கும் குறைவான இடங்களே உள்ளதால் தங்களின் எதிர்கால நலன் கருதி விரைந்து பதிவு செய்து கொள்ளுமாறு பொது மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

இந்த இலவசக் காப்புறுதிக்கான மொத்த ஒதுக்கீட்டில் 750,000 பிறந்து 30 நாள் ஆன குழந்தைகள் முதல் ஆறு வயது வரையிலான சிறார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

 இந்நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தில் மாணவர்களை மற்றும் சிறார்களை பதிவு செய்வோம். இப்பணி முற்றுப்பெற்றால் மாநிலத்திலுள்ள 90 விழுக்காட்டு குடும்பங்கள் இந்த காப்புறுதி பாதுகாப்பைப் பெற்றிருக்கும் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு இன்சான் தக்காபுல் காப்புறுதித் திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளேய் செயலியை பதிவிறக்கம் செய்து இ-பேய் வேய்பெய் செயலி வாயிலாக தங்கள் பிள்ளைகளை இந்த காப்புறுதித் திட்டத்தில் பதிவு செய்யும்படி பெற்றோர்களை அமிருடின் கேட்டுக் கொண்டார்.


Pengarang :