ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் தேர்தல்- 56 தொகுதிகளின் நிலவரங்களை சிறப்பு அகப்பக்கம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்

ஷா ஆலம், ஆக 9– சிலாங்கூர் மாநிலத் தேர்தல் தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை மீடியா சிலாங்கூர் சென். பெர்ஹாட் (மீடியா சிலாங்கூர்) தனது சிறப்பு அகப்பக்கம் வாயிலாக ஒளிரப்பு செய்து வருகிறது. வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் உள்பட மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதி நிலவரங்களும் இந்த அகப்பக்கம் வாயிலாக உடனுக்குடன்  வெளியிடப்பட்டும்

தேர்தல் நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள விரும்புவோர்  http://prnselangor.my என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம். மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளின் கள நிலவரங்கள், தரவுகள் மற்றும் கட்சி தேர்தல் கொள்கையறிக்கைகள் ஆகியவையும் இந்த சிறப்பு ஒளிபரப்பில் இடம் பெறும்.

அதோ மட்டுமின்றி, கருத்துக் கணிப்புகள், நடப்பு வேட்பாளர், வாக்காளர் எண்ணிக்கை, இன விகிதாசாரம் மற்றும் தேர்தல் வரலாறு உள்ளிட்ட அம்சங்களையும் இந்த அகப்பக்கம் உள்ளடக்கியிருக்கும்.

சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தினால் (எம்.பி.ஐ.) உருவாக்கப்பட்ட இந்த அகப்பக்கத்தை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூலை 10ஆம் தேதி மீடியா சிலாங்கூர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

 


Pengarang :