ELMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் இன்று காலை 8.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பம்

கோலாலம்பூர், ஆக 12- ஆறு மாநிலங்களில் நடைபெறும் தேர்தலை
முன்னிட்டு மொத்தம் 3,190 வாக்குச் சாவடிகளில் உள்ள 17,048 வாக்களிப்பு
மையங்கள் இன்று காலை 8.00 மணிக்கு திறக்கப்பட்டன.

இந்த மாநிலத் தேர்தல்கள் உடன் இணைந்து நடத்தப்படும் கோல திரங்கானு
நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான 217 வாக்களிப்பு மையங்களை
உள்ளடக்கிய 41 வாக்குச் சாவடிகளும் திறக்கப்பட்டுள்ளன.

ஆறு மாநிலங்கள் மற்றும் கோல திரங்கானு நாடாளுமன்றத் தொகுதியில்
உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளும் இன்று மாலை 6.00 மணிக்கு
மூடப்படும்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, திரங்கானு, கிளந்தான்
ஆகிய ஆறு மாநிலங்களில் மொத்தம் 97 லட்சத்து 73 ஆயிரத்து 571 பதிவு
பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 96 லட்சத்து 74 ஆயிரத்து 456
பேர் சாதாரண வாக்காளர் களாவர்.

வாக்காளர்களாக உள்ள இராணுவத்தினர் மற்றும் அவர்களின்
துணைவியார் எண்ணிக்கை 49,660 ஆகவும் போலீஸ் மற்றும் பி.ஜி.ஏ.
எனப்படும் பொது நடவடிக்கை பிரிவு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின்
துணைவியார் எண்ணிக்கை 47,728ஆகவும் உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து  நாட்டிற்கு திரும்பாத வாக்காளர்களின் எண்ணிக்கை 1,727 ஆகும்.
இன்றைய தேர்தலில் சிலாங்கூரில் உள்ள 56 தொகுதிகளுக்கும்

பினாங்கிலுள்ள 40 தொகுதிகளுக்கும்

நெகிரி செம்பிலானில் உள்ள 36  தொகுதிகளுக்கும்

கெடாவில் உள்ள 36 தொகுதிகளுக்கும்

திரங்கானுவில்  உள்ள 32 தொகுதிகளுக்கு

கிளந்தானில் உள்ள 45 தொகுதிகளுக்கும்  வாக்களிப்பு நடைபெறுகிறது.

 

 


Pengarang :