ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

90 விழுக்காட்டு பகடிவதை, பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களுக்கு 15 நாட்களில் தீர்வு

புத்ரா ஜெயா, ஆக 18- உயர்கல்விக் கூடங்களில் பகடிவதை மற்றும் பாலியல் துன்புறத்தல் தொடபில் செய்யப்பட்ட புகார்களில் 90 விழுக்காடிற்கு 15 நாட்களில் தீர்வு காணப்பட்டதாக கல்வியமைச்சு கூறியது.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கேற்ப பகடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை விரைவுபடுத்தும் நடைமுறையை பின்பற்றும்படி அனைத்து மாவட்ட, மாநில கல்வித் துறைகள் மற்றும் உயர்கல்விக் கூடங்கள் பணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உயர்கல்விக் கூட பணியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் உகந்த பாதுப்பான சூழல் நிலவுவதை உறுதி செய்வதற்கு ஏதுவாக கல்வியமைச்சின் கீழுள்ள அனைத்து உயர்கல்விக் கூடங்களிலும் பகடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விவகாரங்களுக்கு ஆக்ககரமான முறையில் தீர்வு காணப்படுவதை அமைச்சு எப்போதும் உறுதி செய்து வந்துள்ளது என அவ்வறிக்கை தெரிவித்தது.

பகடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பிரச்சனைகளை கையாள்வது தொடர்பான வழிகாட்டியை மற்றும் மாணவர் கட்டொழுங்கு விதிமுறை ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியில் அமைச்சு ஈடுபட்டு வருகிறது. 

1957ஆம் ஆண்டு கல்விச் சட்டம் மற்றும் (1959ஆம் ஆண்டு கட்டொழுங்கு)  கல்வி விதிமுறைகளுக்கு பதிலாக இந்த புதிய விதிமுறைகள் அமல் செய்யப்படும் எனவும் அமைச்சு கூறியது.


Pengarang :