ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பத்து தீகா  சட்டமன்ற  உறுப்பினர்  குடியிருப்பு  வசதிகளை மேம்படுத்துவார்!

ஷா ஆலம், ஆகஸ்ட் 20: பத்து தீகா மாநில சட்டமன்ற உறுப்பினர் (ADN) இப்பகுதியின் மறு மேம்பாட்டில் கவனம் செலுத்த உறுதியாக உள்ளனர், குறிப்பாக  இப்பகுதி 40 ஆண்டுகளுக்கும் மேலான குடியேற்றங்களை உள்ளடக்கியது.

எவ்வாறாயினும், இச் சட்டமன்ற தொகுதி  ஷா ஆலம் மாநகருக்குள் அமைந்திருப்பதால் குடியிருப்பாளர்களுக்கு  நலமளிக்கும் மாற்றங்களை  கொண்டு வர பரிசீலிக்க வேண்டும் என்று டேனியல் அல்-ரஷித் ஹரோன் கூறினார்.

“இது தொடர்பாக சம்பந்தப்பட்ட  பல தரப்பினருடன் தான் கலந்துரையாடலை  நடத்தவுள்ளதாகவும்,. இங்கு செய்யப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் ஆகும் என்றார்

“30,40 ஆண்டுகளுக்கும் மேலான குடியேற்றப் பகுதிகளை மறுவடிவமைப்பு  செய்வதே எங்கள் நோக்கம்.

வீட்டின் மோசமான நிலையை நாங்கள் மறுவடிவமைப்பு செய்யாவிட்டால், அது அதிக பராமரிப்பு செலவுகளை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

இன்று, பத்து தீகா சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலம் ப்ரிமா அடுக்குமாடி குடியிருப்பில் மத்திய- மாநில அரசுகளின் ஏற்பாட்டில்  நடக்கும்  Ehsan Rahmah Sale மலிவு விற்பனையில்  அவரை  சந்தித்த போது இவ்வாறு கூறினார்.

நடந்து முடிந்த  மாநில தேர்தலில் டேனியல் அல்-ரஷீத் 29,064 வாக்குகளைப் பெற்று 3,382 பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றார்.  பெரிக்காத்தான்  நேஷனல் (PN) சார்பில்  போட்டியிட்ட  டத்தோஸ்ரீ ரீனா ஹருன் 25,682 வாக்குகள் பெற்ற வேளையில் MUDA வின் சேடா ரசாக் 1,908 வாக்குகளை பெற்று தோல்வி கண்டார்.

முன்னதாக, பத்து தீகா மாநில சட்டமன்றத்தை இப்போது அம்பாங்கின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரோட்சியா இஸ்மாயில் அவர்கள் மூன்று தவணைகள் வெற்றி பெற்றார்.


Pengarang :