MEDIA STATEMENTNATIONALPBT

உலு லங்காட்டில் வெள்ளப் பாதிப்புள்ள பகுதிகளில் வடிகால் முறை தரம் உயர்த்தப்படும்

ஷா ஆலம், ஆக 21- கனத்த மழையின் போது வெள்ளப் பிரச்சனையை எதிர்நோக்கும் உலு லங்காட் 16,17 மற்றும் 18 வது மைலில் வடிகால் முறையைத் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கையை தாம் துரிதப்படுத்த உள்ளத டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

இப்பகுதிகளில் வெள்ளப் பிரச்சனை கடுமையானதாக உள்ளதாகக் கூறிய டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ், இவ்விவகாரத்தை தாம் காஜாங் நகராண்மைக் கழகத்தின் பொறியியல் பிரிவு மற்றும் பொதுப்பணித்து துறையின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளதாக குறிப்பிட்டார்.

ஒரு மணி நேரத்திற்கு மழை கடுமையாகப் பெய்தால் கூட இப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டு விடுகிறது. இந்த வெள்ளப் பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் வடிகால் முறையைத் தரம் உயர்த்துவதற்கு நான் கோரியுள்ளேன் என்றார் அவர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைத் தாம் நேற்று நேரில் சென்று பார்வையிட்ட தாகக்  கூறிய அவர், இந்த பிரச்சனை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்க முடியாது என்பதால் தீர்வுக்கான நடவடிக்கைளைத் தாம் விரைந்து எடுக்கவுள்ளதாகச் சொன்னார்.

நேற்று இங்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதான கால்வாய் போதுமான அளவு அகலத்தைக் கொண்டிராதது இந்த வெள்ளப் பிரச்சனைக்கு காரணமாக உள்ளது கண்றியப்பட்டுள்ள நிலையில் இவ்விவகாரம் பொதுப்பணித் துறை மற்றும் காஜாங் நகராண்மைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது என்றார்


Pengarang :