ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 408 ஆக குறைந்துள்ளது

ஷா ஆலம் அக்.1: கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 147 குடும்பங்களைச் சேர்ந்த 437 பேருடன் ஒப்பிடும்போது இன்று காலை 8 மணி நிலவரப்படி 136 குடும்பங்களைச் சேர்ந்த 408 பேராகக் குறைந்துள்ளது.

மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (ஏபிஎம்) பேரிடர் மேலாண்மை செயலகத்தின் கெடா மாநில தலைவர், மேஜர் (பிஏ) முஹம்மது சுஹைமி முகமது ஜைன், பாதிக்கப்பட்ட அனைவரும் கோத்தா ஸ்டார்  மாவட்டத்தில் செயல்படும் மூன்று தற்காலிக  மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

“சம்பந்தப்பட்ட மூன்று PPS தற்காலிக தங்குமிடம் தேசிய இடைநிலைப்பள்ளி  தாமான் அமான் Sekolah Menengah Kebangsaan (SK) Taman Aman இதில் 93 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 274 பேர் உள்ளனர், தேசிய பள்ளி ஸ்ரீ கூநோங் SK Seri Gunung (29 குடும்பங்களைச் சேர்ந்த 91 பேர்) மற்றும்  Sekolah Menengah Kebangsaan (SMK) தேசிய இடைநிலைப் பள்ளி அலோர் மேரா (14 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். )

“தண்ணீர் குறைந்து வருகிறது, இன்று வானிலை நன்றாக இருந்தால், பாதிக்கப்பட்ட அனைவரும் அவர்கள்  வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :