NATIONAL

பாலஸ்தீன விவகாரம் – அனைத்துலக நிலையில் இஸ்ரேலுக்கு நெருக்குதல் தர வேண்டும் – ஜாஹிட் வலியுறுத்து

கோலாலம்பூர், அக் 9- இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து
விடுதலைப் பெறுவதற்கும் சட்டத்திற்கு புறம்பான முறையில்
பறிக்கப்பட்ட நிலத்தை திரும்பப் பெறுவதற்கும் கிழக்கு ஜெருசலதை
மையமாக கொண்டு இறையாண்மை கொண்ட சுதந்திர நாட்டைப்
பெறுவதற்கும் பாலஸ்தீனர்களுக்கு முழுத் தகுதி உள்ளது.

கடந்த வாரம் தொடங்கிய இஸ்ரேல்-ஹாமாஸ் மோதலின் பின்னணியில்
உள்ள பாலஸ்தீனத்தின் போராட்டத்திற்கு முழு ஆதரவளிக்கும்
நிலைப்பாட்ட்டை மலேசியா கொண்டுள்ளது என்று துணைப் பிரதமர்
டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி கூறினார்.

இந்த மோதலில் உயிருடச்சேதங்கள் ஏற்பட்டுள்ளது குறித்து
மலேசியாவின் கவலையை வெளிப்படுத்திய அவர், இஸ்ரேலிய
அரசாங்கம் மேற்கொண்டு வரும் சினமூட்டும் நடவடிக்கைகள் மற்றும்
தீவிரவாத போக்கினை தாங்கள் முற்றாக நிராகரிப்பதாகச் சொன்னார்.

இனவாதக் கொள்கையை கைவிடவும் பாலஸ்தீனர்களை மோசமாக
நடத்துவதை நிறுத்தவும் இஸ்ரேலை நிர்பந்திக்கும்படி அனைத்துலக
சமூகத்தை குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றத்தை
மலேசியா கேட்டுக் கொள்வதாக மக்களைவில் வாசித்த அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.

நீண்ட காலமாக அடக்குமுறை, சர்வாதிகாரத்தை எதிர்கொண்டு வரும்
சமூகம் ஒரு கட்டத்தில் இறுதி முடிவுக்கு வரும். இதுவே
பாலஸ்தீனத்தில் நடந்து வரும் தொடர்கதையாக உள்ளது என்றார் அவர்.
தீவிரவாதப் பிரிவுகளால் வலுப்பெற்றுள்ள இஸ்ரேலிய அரசாங்கம் டெல்
அவிவ்வில் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து தனது அடக்கு முறை
நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :