NATIONAL

மடாணி பொருளாதார கட்டமைப்பு விரிவானது, நடப்புச் சூழலுக்கு ஏற்றது- பிரதமர் கூறுகிறார்

கோலாலம்பூர், அக் 9- விரிவான அமலாக்க கட்டமப்பையும் நடப்பு
பொருளாதார சூழலுக்கு ஏற்ற வகையிலும் உள்ள காரணத்தால் 2030
கூட்டு வளப்ப தொலைநோக்கு கொள்கைக்கு மாற்றாக மடாணி
பொருளாதாரத்தை அரசாங்கம் அமல்படுத்தியுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் கூறினார்.

முன்பு அமல்படுத்தப்பட்டிருந்த டபள்யூ.கே.பி. 2030 எனப்படும் அந்த
கொள்கை நிர்வாக முறை விவகாரத்தை வலியுறுத்தவும் நடப்பு
பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பவும் அமையவில்லை என்று அவர்
சொன்னார்.

டபள்யூ.கே.பி. 2030 உலகலாவிய கட்டமைப்பாக மட்டும் விளங்கியது.
எனினும், வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு போன்ற நடப்பு பிரச்சனைகள்
மீது கவனம் செலுத்தாது உள்ளிட்ட சில குறைபாடுகளை அது
கொண்டிருந்தது என அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த கொள்கையானது, நம்மிடம் இருப்பது என்ன?, எவ்வளவு
கடன் உள்ளது? அரசாங்கம் சுமக்கும் நிதிப்பற்றாக்குறை போன்ற
அம்சங்களில் கவனம் செலுத்தவில்லை. ஆகவே, தற்போதைய
திட்டங்களில் இந்த அம்சங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்
என்று அவர் தெரிவித்தார்.

எதிர்காலச் சந்ததியினரை மனதில் கொண்டு எந்த திட்டத்தையும்
வகுக்கும் போது மேற்கத்திய மாதிரியின் மயக்கும் வார்த்தைகளால்
திருப்தியடைந்து விடக்கூடாது. மாறாக நமது சித்தாந்தங்கள் மற்றும்
பண்புகளைக் கொண்டு உள்நாட்டு மதிப்புக் கூறுகளையும் வலிமையையும்
பெற்றிருக்க வேண்டும் என அவர் சொன்னார்.

மக்களவையில் இன்று மடாணி பொருளாதாரத்திற்கும் டபள்யு.கே.பி. 2030
கொள்கைக்கும் இடையிலான வேறுபாடு குறித்து பூலாய் தொகுதி

பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் சுஹைஸான் கையாட் எழுப்பிய
கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :