SELANGOR

ஆகஸ்டு முதல் மேரு தொகுதியைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் மலிவு விற்பனை வழி பயன்பெற்றனர்

கிள்ளான், அக் 11- இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் முதல் மேரு சட்டமன்றத்
தொகுதியில் நடத்தப்பட்ட நான்கு ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை
திட்டங்களின் வழி அத்தொகுதியை சேர்ந்த சுமார் 2,000 பேர் பயன்
பெற்றனர்.

இந்த விற்பனையில் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்
வெளியீடுகளான கோழி, முட்டை, அரிசி போன்ற பொருள்கள் பொது
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றதாக தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் மரியம் அப்துல் ரஷிட் கூறினார்.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இந்த தொகுதியில் நான்கு இடங்களில்
மலிவு விற்பனைகளை நடத்தியுள்ளோம். இதன் மூலம் கிட்டத்தட்ட 2,000
பேர் பயன் பெற்றனர்.

மேரு தொகுதி மக்களை மட்டும் இலக்காக கொண்டு இந்த மலிவு
விற்பனை நடத்தப்பட்ட போதிலும் அருகிலுள்ள தொகுதிகளைச்
சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்று பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இருந்தாலும் பாதகமில்லை. சிலாங்கூர் மாநில மக்கள் பயனடைய
வேண்டும் என்பதுதான் நமக்கு முக்கியம் என்றார் அவர்.

இன்று இங்குள்ள ஜாலான் சுங்கை காப்பாரில் நடைபெற்ற இந்த மலிவு
விற்பனையில் பங்கு பெறுவதற்காக பொது மக்கள் காலை 7.30 மணி
முதல் வரிசையில் காத்திருக்கத் தொடங்கியதாக சிலாங்கூர் கினியிடம்
அவர் சொன்னார்.

காலை 9.30 மணிக்குதான் வரிசை எண்கள் வழங்கப்படும் என நாங்கள்
முன்னதாக அறிவித்திருந்தோம். எனினும், சிலர் அதிகாலை முதல்
வரிசையில் காத்திருக்கத் தொடங்கி விட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விற்பனை முறையாகவும் பொதுமக்களுக்கு எளிதாகவும் அமையும்
வகையில் மேலும் சிறப்பான விற்பனைச் செயல்திட்டத்தை அடுத்து

வரும் மலிவு விற்பனைகளின் போது அமல்படுத்த தாங்கள்
திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :