SELANGOR

கால்பந்துப் போட்டியில் களமிறங்கினார் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ்- வெற்றிக் கோல் அடித்து சாதனை

ஷா ஆலம், அக் 11- பொதுவாக விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கி
வைக்க அழைக்கப்படும் அரசியல் தலைவர்கள் போட்டிகளை விசில்
அடித்து தொடக்கி வைப்பார்கள், அல்லது அரங்கில் அமர்ந்து
விளையாட்டை ரசிப்பார்கள்.

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஆட்ட நாயகர்களில் ஒருவராக திடலில்
இறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் வழி கோல் ஒன்றையும் புகுத்தி
பார்வையாளர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார் கோத்தா கெமுனிங்
சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள செக்சன் 4 திடலில் நடைபெற்ற ஸ்ரீ
மூடா மாஸ்டர்ஸ் மற்றும் காப்பார் மாஸ்டர்ஸ் குழுக்களுக்கிடையிலான
ஆட்டத்தின் போது பிரகாஷ் ஸ்ரீ மூடா மாஸ்டர்ஸ் குழுவின் கௌரவ
ஆட்டக்காரராக களம் இறங்கினார்.

வெட்ரன் எனப்படும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கான இந்த
நட்புமுறை ஆட்டத்தில் ஸ்ரீ மூடா மாஸ்டர்ஸ் குழு 4-2 என்ற கோல்
கணக்கில் காப்பார் மாஸ்டர்ஸ் குழுவைத் தோற்கடித்தது.

இந்த ஆட்டத்தில் மிகவும் அபாரமாக விளையாடிய பிரகாஷ், எதிரணி
ஆட்டக் கார ர்களின் அரணை லாவகமாகத் தாண்டிச் சென்று பந்தை
தலையால் முட்டி ஸ்ரீ மூடா மாஸ்டர்ஸ் குழுவுக்கு ஒரு கோலைப்
பெற்றுத் தந்தார்

இத்தகைய விளையாட்டுகளின் வாயிலாக உடலாரோக்கியத்தை பேணி
காக்கும் அதேவேளையில் சமூகத்தில் ஒற்றுமையையும் வளர்க்க முடியும்
என்று பிரகாஷ் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஏற்பாடு செய்யப்படும் இது போன்ற விளையாட்டுகளில்
தாமும் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :