SELANGOR

நீர் விநியோக மறுசீரமைப்பு 38.35 சதவீதத்தை எட்டியுள்ளது

ஷா ஆலம், அக் 12: இன்று காலை 9 மணி நிலவரப்படி சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு
நிலையத்தில் (எல்ஆர்ஏ) பராமரிப்பு பணிகளால் பாதிக்கப்பட்ட நீர் விநியோக
மறுசீரமைப்பு 38.35 சதவீதத்தை எட்டியது.

உலு லங்காட்டில் 82.7 சதவீதம், பெட்டாலிங்கில் 73 சதவீதம் மற்றும் கோலாலம்பூரில்
10.8 சதவீதம் என பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி தெரிவித்தது.

பயனர்களின் இருப்பிடம் மற்றும் தூரத்தைப் பொறுத்து ஒரு
பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நீர் விநியோகத்தை
மீட்டெடுப்பதற்கான காலம் வேறுபடும்,“ என்று அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் வழங்கல் குறித்தத் தகவல்களை அவ்வப்போது
அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்பு தளம் https://waterupdates.airselangor.com/
மூலம் பயனர்கள் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடந்த செவ்வாய்கிழமை, சுங்கை லங்காட் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆயர் சிலாங்கூர்
பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது. இதன் விளைவாக பெட்டாலிங், கோலாலம்பூர்
மற்றும் உலு லங்காட் ஆகிய பகுதிகளில் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடைகள்
ஏற்பட்டன.

இன்று நண்பகல் 12 மணிக்குப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக
வழக்க நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :