ANTARABANGSA

உலகின் மிகப்பெரிய அணுசக்தி நிலையம் அருகே சுமாமி- 0.4 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழுந்தன

தோக்கியோ, ஜன 2- ஜப்பானின் நிகாத்தா மாவட்டத்தில் உள்ள காஷிவாஸாக்கி-கரிவா அணுச்சக்தி நிலையம் அருகே ஏற்பட்ட சுனாமியால் 0.4 மீட்டர் அளவுக்கு அலைகள் எழுந்ததாகத் தோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) நிறுவனம் கூறியது.

இச்சம்பவத்தால் உலகின் மிகப்பெரிய அணுசக்தி நிலையத்தில் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று ஃபுக்குய் வட்டார பாதுகாப்பு செயல்குழு கூறியது.

நேற்று ஜப்பானின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஹக்காய்டோ தீவு தொடங்கி தென் பகுதி தீவான கியுஷூ வரையலான கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு இஷிகாவா மற்றும் நிகாத்தாவில் பெரிய அளவில் சுமாமி அபாயம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 4.3 முதல் 7.6 வரையிலான ஒன்பது நில நடுக்கங்கள் நேற்று உள்நாட்டு நேரப்படி 5.06 மணி தொடங்கி தொடர்ச்சியாக ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்கள் காரணமாக இஷிகாவா மற்றும் நிகாத்த்தா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


Pengarang :