ECONOMYSELANGORYB ACTIVITIES

தேசிய உயிரியல் பூங்காவின் வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒதுக்கீட்டுக்கு  சிலாங்கூர் பங்களிப்பு

ஷா ஆலம், பிப்ரவரி 4: தேசிய உயிரியல் பூங்காவில் வசதிகளை மேம்படுத்தும் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யவும் சிலாங்கூர் அரசாங்கம் பல ஒதுக்கீடுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.  டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி,  அதிகரித்துவரும் பார்வையாளர்களின் வசதிக்கு  இந்த  நிதியளிப்பு என்று கூறினார்.

18 ஜனவரி 2024 அன்று ஷா ஆலமின் டபுள் ட்ரீ ஹில்டனில் நடந்த நுசன்தாரா செயற்கை நுண்ணறிவு (AI) நிகழ்ச்சிக்கான சிலாங்கூர் டிஜிட்டல் பள்ளி பட்டமளிப்பு விழாவிற்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இதனை கூறினார்.

சிலாங்கூரில் அமைந்துள்ள தேசிய உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப வசதிகளை மேம்படுத்த மாநில அரசு உதவ தயாராக உள்ளது” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 27 அன்று, நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் நிதியில் மேலும் RM5 மில்லியன் கூடுதலாக மையத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

சூ நெகாரா  கொடையாளர்கள்  மற்றும்  நிர்வாகத்துடன் இணைந்து இந்தத் தொகை நிவகிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.


Pengarang :