ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

மித்ரா புதிய தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் நியமனம்.

செய்தி ; சு.சுப்பையா
புத்ரா ஜெயா.பிப்.9- இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனமான மித்ராவின் புதிய தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமசிவம் நியமிக்கப் பட்டார் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ரஹிம் அலுவகம் வெளியிட்டுள்ளது அறிக்கை தெரிவிக்கிறது.
மித்ராவின் தலைவராக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் சேவையாற்றினார். அவர் தொழில் முனைவர் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் வேறு ஒருவர் மித்ராவின் தலைவராக பொறுப்பு ஏற்க விருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப் பட்டது.
ஆனால் தற்போது இப்பிரச்னைக்கு பிரதமர் அலுவலக அறிக்கை முற்றுப் புள்ளி வைத்து விட்டது. இனி பிரபாகரன் சிறப்பாக மித்ராவை வழி நடத்துவார் என்று இந்திய சமுதாயம் எதிர் பார்க்கிறது.
இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கு என்று இந்நிறுவனம் தொடங்கப் பட்டது. இந்நிறுவனத்திற்கு  ஆண்டு தோறும் வரவு செலவு திட்டத்தின் ரி.ம. 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. இதன் வழி இந்திய சமுதாய பொருளாதார சமூக  மேம்பாட்டு பிரச்னைகளை  அடையாளங்கண்டு  தீர்வு காணும் நடவடிக்கையில் அரசு ஈடு பட்டு வருகிறது.
இந்நியமனத்தின்வழி மித்ரா சிறப்பாகவும் பொறுப்புடனும் செயல் படும் என்று தாம் எதிர் பார்ப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

Pengarang :