ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவை “2024 ஆம் ஆண்டில், இப்பிராந்தியத்தில் மதிக்கப் படும் நாடாக மாற்றுவோம்.

கோலாலம்பூர்   பிப்  9 ; -கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி கவுன்சில் நடத்திய சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தில், மலேசியா இப்பிராந்தியத்தில் மதிக்கப் படவும் “2024 ஆம் ஆண்டில்,  ஒரு சிறந்த நாடாக திரும்பவும்,வேண்டியதற்கான தேவைகளை முன்னெடுக்க  அமைச்சரவை மிகுந்த கவனம் செலுத்துகிறது என பிரதமர் கூறினார்.

இங்கே கோலாலம்பூர் சிலாங்கூர்  சீன வர்த்தக இயக்கங்களின் மண்டபத்தில், நடந்த விருந்தில் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ; அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு  துறை அமைச்சர் சாங் லிஹ் காங்; KLSCAH தலைவர் Ngan Teng Ye மற்றும் மலேசியாவுக்கான சீன தூதர் Ouyang Yujing  ஆகியோர் கலந்து கொண்டனர்.

அன்வார் இந்த நாட்டில் இன ஒற்றுமையின் வலிமையை கொண்டு , நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்தும் அபிலாஷை வெற்றியடையச் செய்வதில் அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து பங்களிப்பார்கள் என்று நம்புவதாக கூறினார்.

இதன்மூலம் மலேசியாவை பிராந்தியத்தில் ஒரு சிறந்த நாடாக மீண்டும் நிலைநிறுத்த முடியும்.
இதற்கிடையில், நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், மலேசியா-சீனா உறவுகள் இப்போது மூலோபாய மட்டத்தில் இருப்பதாகவும், இது இந்த நாட்டிற்கு அதிக முதலீட்டைக் கொண்டுவர உதவும் என்றும் கூறினார்.

மக்களின் நலனுக்காக இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு தொடர்ந்து பேணப்படும் என்றும் அவர் கூறினார்.

“மலேசியா-சீனா உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது ,  இந்த உறவு அமைதிக்கானது என்பதைக் காட்ட நாங்கள் முற்படுகிறோம், இப்போது நாங்கள் பொருளாதார உறவுகளில் கவனம் செலுத்துகிறோம்.

” மலேசியாவின் பொருளாதாரத் துறையில் முதலீடு செய்யும் முக்கிய நாடுகளில் சீனாவும் ஒன்றாகும், இப்போது நாங்கள் அந்த உறவை வளர்த்து வருகிறோம், கல்வி, கலாச்சாரம் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகிய துறைகளை  அது  உள்ளடக்கியது,” என்று அவர் கூறினார்.

1990 களில் மாணவர் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு இருந்து சீர்திருத்த சகாப்தம் வரை, அரசாங்கத்திற்கும் தனக்கும் வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவுக்காக KLSCH நிர்வாகத்திற்கு அன்வார் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்பை அசாதாரணமானது என்று விவரித்த பிரதமர், KLSCAH எப்போதும் தேவைப்படும் போது அங்கு இருந்து வருவதாகவும், இப்போது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கத்தின் முயற்சிகளை முழுமையாக ஆதரிக்கிறது என்றார்.

“ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து ஆதரிப்பதற்காக KLSCAH க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், ஊழல், நாட்டில் ஒரு பெரிய குற்றம் என்று நான் கூறுகிறேன், இந்த குற்றம் நிறுத்தப்பட வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.


Pengarang :