NATIONAL

சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், பிப் 20: இன்று இரவு 7 மணி வரை சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

இதே வானிலைதான் பினாங்கு, பேராக், மலாக்கா, கெடா பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களிலும் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :