SELANGOR

325 ஏழ்மையான குடியிருப்பாளர்களுக்கு உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் நன்கொடை வழங்கியது

ஷா ஆலம், மார்ச் 19: ரம்ஜான் புனித மாத நிகழ்ச்சியின் போது
மாவட்டத்தில் உள்ள 325 ஏழ்மையான குடியிருப்பாளர்களுக்கு உலு சிலாங்கூர்
நகராண்மை கழகம் (எம்பிஎச்எஸ்) நன்கொடை வழங்கியது.

குறிப்பாக இந்த ரம்ஜான் மாதத்தில் மக்கள் ஒதுக்கி வைக்கப் படாமல் இருக்க
ஆண்டுதோறும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக எம்பிஎச்எஸ்
தெரிவித்துள்ளது.

“எம்பிஎச்எஸ் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள கவுன்சிலர்களுடன் சேர்ந்து,
அடிப்படைத் தேவைகளை நன்கொடையாக வழங்குவதன் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பாளர்களை ஆதரிக்கிறது.

“இத்திட்டம் “Segi Value Holding Sdn Bhd“ உடன் இணைந்து அனைத்து
பெறுநர்களுக்கும் உலர் உணவுகள் மற்றும் RM120 மதிப்புள்ள “Segi Fresh“
வவுச்சர்களை விநியோகித்து உள்ளது” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

நன்கொடை வழங்கும் விழாவை எம்பிஎச்எஸ் சமூக மேம்பாட்டுத் துறைத் தலைவர்
நூருல் ஹுதா அஹ்மட் கைருடின் மற்றும் “Segi Fresh“ நிறுவன தொடர்பு
மேலாளர் முகமட் ஐனுடின் அலிஃப் சலேஹுடின் ஆகியோர் நடத்தி வைத்தார்.


Pengarang :