MEDIA STATEMENTNATIONAL

லோரி ஓட்டுநர்களிடம் லஞ்சம்  பெற்ற குற்றச்சாட்டில்  மூன்று போலீஸ்காரர்கள் கைது

ஜோகூர் பாரு, மார்ச் 28- கடந்தாண்டு நவம்பர் மாதம் மெர்சிங் வட்டாரத்திலுள்ள  செம்பனை மற்றும் உர லாரி ஓட்டுநர்களிடமிருந்து 7,800 லஞ்சம் பெற்ற சந்தேகத்தின் பேரில் மூன்று போலீஸ்காரர்களை   மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) மெர்சிங் கிளை  கைது செய்துள்ளது.

முப்பத்தாறு  முதல்  42 வயதுடைய அந்த  மூன்று சந்தேக நபர்களும் நேற்று மாலை 7 மணியளவில் ஜோகூர் மாநில எம்ஏசிசி அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர்.

1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்  கீழ் வழக்குத் தொடரப்படாமல் இருப்பதற்கு தூண்டுதலாக அந்த லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஜோகூர் எம்ஏசிசி இயக்குனர் டத்தோ ஆஸ்மி அலியாஸை தொடர்பு கொண்டபோது​​இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.

இந்த வழக்கு 2009 ஆம் ஆண்டு எம்ஏசிசி சட்டத்தின் இன் பிரிவு 17(ஏ) இன் கீழ் விசாரிக்கப்படுவதாகக் கூறிய அவர்,  சந்தேக நபர்கள் அனைவரும் தடுப்புக் காவல் அனுமதியைப் பெறுவதற்காக ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு இன்று காலை 8.30 மணியளவில்  அழைத்து வரப்பட்டனர் என்றார்.


Pengarang :