NATIONAL

மகனைத் துன்புறுத்தியதாகத் தாய் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மார்ச் 29 – தனது ஒன்பது வயது மகனை காயம் ஏற்படும் அளவுக்குப் துன்புறுத்தியதாகத் தாயார் மீது இங்குள்ள  செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று  குற்றஞ்சாட்டப்பட்டது .

கடந்த  2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  இரவு 9 மணி மற்றும் 9.30 மணிக்கு இடையில்  இங்குள்ள வாங்சா மாஜூவில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில்  தன் மகனுக்கு   உடல் ரீதியாக காயம் ஏற்படும்  அளவுக்கு துன்புறுத்தியதாக  உணவு வியாபாரியான அந்த 33 வயது மாது  குற்றம் சாட்டப்பட்டார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 50,000 வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு மேற்போகாத  சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும்   2001ஆம் ஆண்டு சிறார்  சட்டத்தின்  31(1)(ஏ) பிரிவின் குற்றம் சாட்டப்பட்டவரை  ஒரு நபர் உத்தவரவாதத்துடன் 15,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்கவும் கூடுதல் நிபந்தனையாக   மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில்  ஆஜராகவும்  அரசுத் தரப்பு வழககறிஞர்  நூர்ஸ்யுஹாடா அப்துல் ரவூப் ர்  நீதிமன்றத்நில் பரிந்துரைத்தார்

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அகமது ஷமில் ஆசாத் அப்துல் ஹமிட், தனது கட்சிக்காரர்   இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாலும்  போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கியதாலும்  ஜாமீன் தொகையை  5,000 வெள்ளியாக குறைக்குமாறு கோரினார்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை கூடுதல்  நிபந்தனைகளுடன் 6,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி டத்தோ  நுவாமான் முகமது  ஜூடி,  அவரது அனைத்துலக கடப்பிதழை  நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.


Pengarang :