SELANGOR

வெள்ளம் வடிந்தது- பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் வீடு திரும்ப அனுமதி

ஷா ஆலம், ஏப் 17- திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியிருந்த  சுங்கை பூலோ மற்றும் கோல சிலாங்கூரைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினர்  இன்று மதியம் 12.00  மணி முதல் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், மெர்பாவ் செம்பாக் பள்ளி மற்றும் கோலா சிலாங்கூர் டேசா கோல்பீல்ட்ஸ் நகராண்மைக் கழக மண்டபம் ஆகிய நிவாரண மையங்கள் இன்னும் திறந்திருப்பதாக சிலாங்கூர் மாநில  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குனர் கூறினார்.

தற்போதைய நிச்சயமற்ற வானிலை காரணமாக 500 உறுப்பினர்களோடு  மீட்புப் பணிக்கான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

பாதிக்கப்பட்ட  பெரும்பாலான பகுதிகளில்  நீர் வடிந்துவிட்ட நிலையில்  சிலர் வீடு திரும்பியுள்ளனர். அங்குள்ள நிலைமையை கண்காணித்த பிறகே அவர்களை வீட்டிற்குத் திரும்ப அனுமதித்தோம்.

கடல் பெருக்குடன்  கனமழையும் மோதுவதால் வெள்ளம் ஏற்படுகிறது. இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள்  உள்ளது என்று  இன்று இங்குள்ள ஏயோன் பேரங்காடியில் நடைபெற்ற சம்பவத்திற்கு முந்தைய தொண்டு பயிற்சி நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவர் கூறினார்.

நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து கோல சிலாங்கூரின்  தாமான் சௌஜானா அமான் மற்றும் சுங்கை பூலோ, கம்போங் குபு காஜா வட்டாரத்திலுள்ள  88 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 403 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.


Pengarang :