NATIONAL

நீர் மாசுபாடு காரணத்தால் பத்தாங் காலி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தற்காலிக பணி நிறுத்தம்

ஷா ஆலம், ஏப் 17: இன்று காலை பத்தாங் காலி ஆற்றில் நீர் மாசுபாடு ஏற்பட்ட காரணத்தால் பத்தாங்காலி உலு சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எல்ஆர்ஏ) தற்காலிகமாகப் பணி நிறுத்தம் செய்யப்பட்டது.

இன்று காலை 8.50 முதல் இரண்டு மணி நேரம் நீர் சுத்திகரிப்பு பணி நிறுத்தம் செய்ததாகச் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் (LUAS) அறிவித்தது. இருப்பினும், பயனர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இன்று காலை 8.50 மணி முதல் 10.50 மணி வரை கண்காணிப்பு நடவடிக்கையில் பத்தாங்காலி சுத்திகரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக பணி நிறுத்தம் செய்யப்பட்டது.

“தற்காலிகமாக நீர் சுத்திகரிப்பு பணி  நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் விநியோகம் தொடர்பாகப் பயனர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை” என்று முகநூலில் ஆயர் சிலாங்கூர் அறிவித்தது.

அதிகாலையிலிருந்து பெய்த கனமழை காரணமாகப் பத்தாங் காலி ஆற்றில் நீர் மாசுபாடு அதிகரித்து, 1,600 NTU (Nephelometric Turbidity Unit) அளவைத் தாண்டியது என லுவாஸ் தெரிவித்தது.

லுவாஸ் ரேபிட் ஸ்குவாட் குழுவினர் களம் இறங்கி பத்தாங் காலி ஆற்றின் மேல்பகுதியில் அதிக மழை பெய்ததால் மாசுபாடு பிரச்சனை ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.

“இருப்பினும், மேற்பகுதியில் நிலவேலை நடவடிக்கைகள் போன்ற சாத்தியமான நடவடிக்கைகளுக்கான சோதனைகள் மற்றும் பின்தொடர்தல் கண்காணிப்பையும் லுவாஸ் மேற்கொண்டு வருகிறது,” என தெரிவிக்கப்பட்டது.


Pengarang :