SELANGOR

ஹலால் தயாரிப்பு தொழில் துறையின் தரவைச் சேமிக்க தகவல் தளம் ஒன்றை உருவாக்க எண்ணம்

ஷா ஆலம், ஏப் 17:  ஹலால்  தயாரிப்பு  தொழில் துறையின் தரவைச் சேமிப்பதற்காக ஒரு மையப்படுத்தப்பட்ட தகவல் தளத்தை (சிஐபி) உருவாக்க ஹலால் இன்டர்நேஷனல் சிலாங்கூர் (HIS)  எண்ணம் கொண்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, தரவுத்தளத்தை உருவாக்க ஒப்பந்ததாரர்களை நியமிப்பதற்கான விரிவான முன்மொழிவு மற்றும் மேற்கோள்களை சமர்ப்பிக்க ஒப்பந்ததாரர்களை அதன் டிஜிட்டல்  துறை வரவேற்கிறது.

இணைய ஹலால் தொடர்பான அமைப்பை உருவாக்கும் முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) பொருளாதார மையத்தின் கீழ் ஹலால் தொழில் துறையில் கவனம் செலுத்தும் முக்கிய முயற்சிகளில் ஒன்று சிஐபி என்று விளக்கப்பட்டது.

“இது நிறுவனங்களின், தயாரிப்புகள், சந்தைப்படுத்தல், வணிகங்கள், சேவைத் துறையோர் மற்றும் பல ஹலால் தொழில்துறை தகவல் அல்லது தரவுகளை சேகரிக்க உதவும்.

“சிஐபி என்பது ஆர்வமுள்ள தரப்பினரால் பயன்படுத்தக்கூடிய தரவைச் சேமிப்பதற்காக ஹலால் தொழில் சூழலை உருவாக்கும் ஒரு தரவுத்தளமாகும்,” என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

மாநிலத்தில் ஹலால் தொழில் வளர்ச்சியில் நான்கு முக்கிய அம்சங்களை கொண்டு வருவதன் மூலம் சிலாங்கூர் ஹலால் செயல் திட்டத்தின் (செல்ஹாப்) மூன்று நடவடிக்கைகளுக்கு ஹலால் இன்டர்நேஷனல் சிலாங்கூர் முன்னணி நிறுவனமாக விளக்குகிறது.


Pengarang :