NATIONAL

லஞ்சம் பெற்றதாக நம்பப்படும் பெர்லிஸ் மாநில மீன்வள அலுவலக ஊழியர் கைது

கங்கார், ஏப் 18: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்திடமிருந்து மாதாந்திர பணத்தைப் பெற்றதாக நம்பப்படும் பெர்லிஸ் மாநில மீன்வள அலுவலக ஊழியர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று கைது செய்தது.

மேலும், 44 வயதான அந்த நபர், குறிப்பிட்ட நிறுவனத்தின் மீன்பிடி படகுகள் செய்த குற்றங்களுக்கு மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க, மாதம் 800 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.

“Pembantu Laut (Gred A19)“ வங்கிக் கணக்கில் 2022 ஆம் ஆண்டில் ஆறு பரிவர்த்தனைகள் கண்டறியப் பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பெர்லிஸ் மாநில எம்ஏசிசி அலுவலகத்தில் பிற்பகல் 2.45 மணியளவில் சாட்சியமளிக்க வந்த போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெர்லிஸ் எம்ஏசிசி இயக்குநர் முகமட் நோர் அடா அப்துட் கனி அந்நபர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்ததுடன், சந்தேக நபருக்கு விளக்கமறியல் இன்று தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :