NATIONAL

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுங்கை பூலோ வட்டார மக்களுக்கு எம்.பி.ஐ. உதவி

ஷா ஆலம், பிப் 18 – திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இரு துயர் துடைப்பு
மையங்களில் தங்கியிருக்கும் சுங்கை பூலோ வட்டாரத்தைச் சேர்ந்த
மக்களுக்குப் பல்வேறு வகையான உதவிகளை எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி
புசார் கழகம் வழங்கியுள்ளது.

மெர்பாவ் செம்பாக் தேசியப் பள்ளி மற்றும் டேசா கோல்பீல்ட்
எம்.பி.கே.எஸ். மண்டத்தில் தங்கியிருக்கும் மக்களுக்கு அத்தியாவசியப்
பொருள்களை வழங்குவதற்காக எம்.பி.ஐ. 10,000 வெள்ளியை ஒதுக்கீடு
செய்துள்ளதாக அதன் சமூக பொறுப்புணர்வு மற்றும் வர்த்தக தகவல்
தொடர்புப் பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

மெர்பாவ் செம்பாக் தேசிய பள்ளியில் தங்கியுள்ளவர்களுக்கு நேற்று
தொடக்கக் கட்ட உதவிகள் வழங்கப்பட்ட வேளையில் டேசா
கோல்பீல்ட்ஸ் எம்.பி.கே.எஸ். மண்டபத்தில் தங்கியுள்ளவர்களுக்கு இன்று
காலை வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொருள்களின் கனிம
நீர் உலர் உணவுப் பொருள்கள், மெத்தை, போர்வை, சானிட்டரி பேட்
மற்றும் டயாபர்ஸ் ஆகியவையும் அடங்கும் என்று அவர் சொன்னார்.

நேற்று முன்தினம் பெய்த கன மழையால் சுங்கை பூலோவின் பல
பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக தாமான்
சவுஜானா அமான், கம்போங் குபு காஜா ஆகிய பகுதிகளில் வசிக்கும் 88
குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் தற்காலிக நிவாரண மையங்களில்
அடைக்கலம் புகுந்தனர்.

தற்போது, மெர்பாவ் செம்பாக் தேசிய பள்ளியில் 364 பேரும் டேசா
கோல்பீல்ட் மண்டபத்தில் 38 பேரும் தங்கியுள்ளனர்.


Pengarang :