ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோலக் குபு பாரு  இடைத் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருப்பது ஜனநாயகத்தை மண்ணாக்குவதாகும்- என்கிறார் டாக்டர் சேவியர் 

கிள்ளான் ஏப்ர 24 ;- கோலா குபு பாரு (KKB) இடைத் தேர்தலுக்குப்  பலர் தயாராகி வரும் வேளையில், தேர்தல் புறக்கணிப்பு அல்லது வாக்கெடுப்பில் இருந்து விலகி இருப்பது குறித்து ஏராளமான பேச்சுகளும் அடிபடுவதாக தெரிகிறது.

அத்தொகுதி வாக்காளர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், உங்கள் விருப்பங்களையும் விதியையும் மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள்.

பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆட்சியில்  அமர்ந்து ஓராண்டுக்கு மேல் மட்டுமே ஆகிறது, ஆனாலும் அவரிடமிருந்து அதிகமான அற்புதங்களை எதிர்பார்க்கிறோம். நிகழ்த்திவரும்   அற்புதங்கள்  ஏற்று  அங்கீகரிக்க சிலருக்கு மனமில்லை.

முடியாட்சி நாடாளுமன்ற மலேசிய அரசியலமைப்பை காத்ததே  அற்புதம்

முதலாவதாக, நாட்டின் அரசியல்  திசை மாறி, பாசிஷ அல்லது சமய அரசாங்கமாகமல்  காப்பாற்ற, பக்காத்தான் பல தியாகங்களையும் சமரசங்களையும் செய்ய வேண்டியிருக்கிறது, மலேசிய  அதன் நடப்பு முடியாட்சி நாடாளுமன்ற மலேசிய நிகழ்ச்சி நிரலின் தொடரை உறுதிப்படுத்த, பாடுபடுகிறது.

மலேசிய நிகழ்ச்சி நிரல் என்ன என்று எளிமையாகச் சொன்னால், அப்போது அனைத்துத் தரப்பினராலும் ஒப்பு கொள்ளப்பட்ட அரச மற்றும் பூமிபுத்ரா சிறப்பு உரிமைகள் தவிர அனைவரும் சமம் என்ற கொள்கையில் நாம் ஒரு நாடாக ஒன்றிணைந்துள்ளோம். அதனை கடந்த 17 மாதங்களாக தற்காத்து  ஒரு  நிலையான  ஆட்சியை வழங்கி வருவது ஒரு அற்புதம் என்றார்  அவர்.

இந்த விஷயத்தில் நாம் சமரசம் செய்து கொள்ள வழியில்லை.  அரசியலமைப்பில்  குறிப்பிடப் பட்டுள்ளதை போன்று, அதன் கோட்பாடுகளின் படி,  இன்றைய மடாணி  கூட்டாட்சியில்   இந்த நாட்டின் கட்டமைப்பில் எந்த மாற்றமும் மின்றி செயல்பட்டு வருவதும், என்ன விலையும்  கொடுத்து அதனை தற்காக்க பிரதமர் மேற்கொண்டுள்ள நகர்வுகள் மற்றொரு  அற்புதும் என்றார்.

அந்நிய நேரடி முதலீட்டுகள் பாதிக்காமல்

தற்போது மடாணி அரசாங்கத்தில்  ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமே  முன்னுரிமை என்ற கருத்து இல்லை.  அதனை  அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.  மாற்றங்கள்  வேண்டி  போராடிய அதே குழுக்கள், இப்போது இடைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு வாக்காளர்களை  வற்புறுத்துவது  வேடிக்கையாக  உள்ளது. பெரிய அளவிலான, மாற்றத்தை கொண்டு வரும் முன் பலமான அடித்தளம் இட வேண்டும்.  அதற்காக பாடுபடும் பிரதமருக்கு  அனைத்து தரப்பினரும்  போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்  என்பது  இயற்கையான  நீதி என்றார் அவர்.

அதை விடுத்து அஸ்திவாரத்தை  ஆட்டி பார்க்க முற்பட்டால்,  இத்தகைய செயல் உண்மையாக இருந்தால், அது நிச்சயமாக நாட்டின் அந்நிய நேரடி முதலீட்டைக் கடுமையாகப் பாதிக்கும், இது அனைவரின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.

நாடு முன்னேற அதிக அந்நிய நேரடி முதலீட்டை சார்ந்துள்ளது. மலேசியர்களின் நல்வாழ்வு, பொருளாதாரம், கல்வி அனைத்தும் மலேசியாவை உலகம் எவ்வாறு பார்க்கிறது என்பதைப் பொறுத்தது என்பதை நாம் நன்கு அறிவோம்.

கூட்டாட்சி அரசியலமைப்பு என்பது  நம் முன்னோர்கள் ஒப்புக்கொண்ட அரசியல் அமைப்பு முறை, அதை  மாற்றுவதில் எந்த  சமரசமும் இல்லை. நடப்பு ஆட்சி முறையில் நாம் ஒரு தேசமாகச் செழித்து வளர்ந்துள்ளோம்.

நிச்சயமாகப் பிரச்சினைகள் உள்ளன, ஆனால் யாருக்குத்தான் பிரச்சினைகள் இல்லை. நாம் ஒரு சிக்கலை எதிர் கொண்டால், முடிந்தவரை  ஆட்ட விதிகளை மாற்றாமல் அதை நம்மால்  சமாளிக்க வேண்டும்.
‘ஆக்க பொறுத்தவன் ஆறப் பொறுக்க  வேண்டும்
கோலக் குபு பாரு வாக்காளர்களிடம் வந்து,  அரசுக்குப் பாடம் புகட்டுங்கள் இடைத் தேர்தலைப் புறக்கணி என்றால்  என்ன  அர்த்தம்? இவர்களுக்கு நம் முன்னோர்கள் மிக சரியான பதிலை  விட்டு சென்றுள்ளார்கள்,   ‘ஆக்க பொறுத்தவன் ஆறப் பொறுக்க  வேண்டும்” என்று  அவர்  கூறினார்.

என்னைப் பொறுத்தவரை தேர்தலின் மூலம் மாநிலத்தைப் புறக்கணிப்பது “எல்லா வகையிலும்   நமக்கு  நஷ்டமே,  எந்த இலாபமற்ற  முட்டாள்தனம்” போன்றது.

பக்காத்தான் ஹராப்பான்   எவ்வளவு காலம்  எண்ணற்ற போராட்டங்களைச் சமாளித்து, சிறைவாசம் அனுபவித்து, ஒரு கட்டத்தில் ரசாயன தண்ணீர் பீரங்கி தாக்குதல்களை நெஞ்சில் தாங்கி   இன்றைய நிலையை எட்டியுள்ளது, அதனை எல்லாம்  மறந்து, நாம்  உருவாக்கிய, நம் தியாகங்களை நாமே  அழிக்க துடிப்பது அறியாமை, நம்மை நாமே  ஏளனம் செய்வதாகும்.

எப்படியோ பாடுபட்டு பக்காத்தான் ஹராப்பான்,  இப்போது ஆட்சியில் உள்ளது. எனவே, உடனடி மாற்றங்களை விரும்புவோர், அதற்கு நேரம் எடுக்கும் என்பதை உணர வேண்டும்,  இப்பொழுது நாடு  சென்று கொண்டிருக்கும் பாதையின் தன்மைக்கு ஏற்ப நாம்  அடி  எடுத்து வைக்க வேண்டும்  என வெளிப்படையாக சொல்கிறேன்  என்றார் முன்னாள் அமைச்சருமான டாக்டர் சேவியர்  ஜெயக்குமார்.

எதிர்க்கட்சியாக  இருந்ததற்கும்  இப்பொழுது   ஆளும் அரசாங்கத்தில் இருப்பதற்கும்  வித்தியாசம் உள்ளது,  ஒரு வண்டியில் பயணிக்கும் பயணியும், ஓட்டுநரும் ஒரே வண்டியில் பயணித்தாலும், வண்டிக்குள் அவர்களின் செயல்கள் மாறுபடுகின்றன,  பயணி சிறிது கண் அயரலாம், ஆனால்  ஓட்டுநர் கண் அயர்ந்தாள் என்னவாகும்,  இது உண்மையில் இரண்டு வெவ்வேறு தளங்கள், எல்லா விதத்திலும்  எம்மாதிரியான மாற்றங்களுக்கும்  நேரம் எடுக்கும்   என்பதை   நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இது நீண்ட காலத்திற்குச் செய்யப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
”ரோம் தேசம் ஒரு நாளில் கட்டப்பட்டது அல்ல”.
ஒரு வாக்காளராக  தேச நிமாணிப்பில், பாதுகாப்பில் சமரசம்  வேண்டாம்
ஆகவே, தேர்தலைப் புறக்கணிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தின் பாடம் கற்பிப்பதாக  எண்ணிக்கொண்டு  நாம்  உருவாக்கிய அடிப்படைக்கு அழிவைக் கொண்டு வரக்கூடாது.

ஒரு வாக்காளராக நீங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்யத் தயாராக இல்லை என்பதை மற்றவர்களுக்கு தெளிவான செய்தியை அனுப்புங்கள்.  நாம் எங்கிருந்து வந்தோம், எதற்கு போராடுகிறோம் என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம்.

தவறான  ஒரு செயலில் ஈடுபட்டு  பின்  வருந்த வேண்டாம், ஏனென்றால் அத்தகைய பாதைகள் அமைக்கப் பட்டால் அதன்  பின்  விளைவுகள்  மோசமானதாக இருக்கும்,
தவறாக  அடி எடுத்து வைத்து அழிந்த  தேசங்கள் உலகில்  பல  உள்ளன   என்றார் அவர்.

Pengarang :