SELANGOR

60 ஆண்டுகால குழாய் நீர் கசிவு பிரச்சனைக்கு மறைந்த லீ கீ ஹியோங் தீர்வு கண்டார்

கோலா குபு பாரு, ஏப் 24: கம்போங் ஆசாம் கும்பாங்கில் வசிப்பவர்கள் எதிர்கொண்ட 60 ஆண்டுகால குழாய் நீர் கசிவு பிரச்சனை மறைந்த லீ கீ ஹியோங்கின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட பிறகு தீர்க்கப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் பெறப்படும் புகார்களை அடுத்து குடியிருப்பாளர்கள் தடையின்றி நீர் விநியோகத்தை அனுபவிப்பதை உறுதி செய்ய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முயன்றார் என அக்கிராம தலைவர் கூறினார்.

“2018 ஆம் ஆண்டில் பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திடமிருந்து நிதியைக் கேட்டு குழாயைப் பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ளும் முயற்சியில் லீ கீ ஈடுபட்டார். ஒரு வருடத்திற்குள், அதாவது 2019இல் சிக்கல் தீர்க்கப்பட்டது. எங்களுக்கு புதிய குழாய் கிடைத்தது.

“இந்த முயற்சியால் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைகின்றன. இப்போது தண்ணீர் விநியோகப் பிரச்சனை இல்லை. அவரின் உதவியால்தான் இவை அனைத்தும் நடந்தது” என்று சிமோன் சென் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

மேலும், லீ கீ ஹியோங் ஒரு முக்கியமான நபராகவும் இருந்தார். அவர் மோசமான நிலையில் இருந்த பழைய சாலைக்குப் பதிலாக கிராம மக்களுக்குப் புதிய சாலை கிடைக்கவும் உதவினார்.


Pengarang :