NATIONAL

ஹெலிகாப்டர் விபத்து- இறந்தவர்களுக்கு கடற்படை வழக்கப்படி இறுதி மரியாதை

ஈப்போ, ஏப் 24- லுமுட், அரச மலேசிய கடற்படைத் தளத்தில் நேற்று இரு
ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலியானவர்கள் மீது
மேற்கொள்ளப்படும் சவப்பரிசோதனை முடிவுற்றவுடன் அரச மலாய்
இராணுவ பட்டாளத்தின் 23வது முகாமில் கடற்படையின் வழக்கப்படி
இறுதி மரியாதை செலுத்தப்படும்.

இறுதி இறுதி மரியாதைச் சடங்கு முடிவுற்றவுடன் இறந்தவர்களின்
குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் உடல்கள் சொந்த
மாநிலங்களுக்குக் கொண்டுச் செல்லப்படும்.

இந்த விபத்தில் இரண்டாவது வாரண்ட் அதிகாரி டி.என்.எல். நோர்ஃபராமி
முகமது சடேய், பிந்தாரா மூடா டி.என்.எல். நோர் ராஹிசா அனுவார்,
கமாண்டர் முகமது பிர்டாவுஸ் ரம்லி, கமாண்டர் முகமது அமிர் முகமது
ஆகியோர் பலியாகினர்.

மேலும் இச்சம்பவத்தில் லெப்டினண்ட் கமாண்டர் வான் ரெஸாவுடின்
வான் ஜைனால் அபிடின், லெப்டினண்ட் கமாண்டர் முகமது அமிருள்
பாரிஸ் முகமது மர்ஜூக்கி, இரண்டாவது வாரண்ட் அதிகாரி டிஎல்ஆர்
முகமது பைசோல் தமாடுன், இரண்டாவது வாரண்ட் அதிகாரி டிஎம்கே
முகமது ஷாரிசான் முகமது தர்மிஸி ஆகியோரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பலியான லெப்டினண்ட் சிவசுதன் தஞ்சப்பனின் நல்லுடல்
சித்தியவான், கம்போங் செர்டாங்கிற்கும் ஜோன்னா பெலிஸிவியா
ரோஹ்னாவின் நல்லுடல் சரவா மாநிலத்தின் செரியானுக்குக் கொண்டுச்
செல்லப்படும்.

இவ்விபத்தில் பலியானவர்கள் உடல் மீது தற்போது மேற்கொள்ளப்பட்டு
வரும் சவப்பரிசோதனை மாலை 3.00 மணியளவில் முடிவுக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று காலை 9.32 மணியளவில் அரச மலேசிய கடற்படையின் இரு
ஹெலிகாப்படர்கள் வானில் மோதிக் கொண்டச் சம்பவத்தில் பத்து
கடற்படை வீரர்கள் மரணமடைந்தனர். லுமுட் கடற்படைத் தளத்தின்
90ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட்டத்திற்கான ஒத்திகையில்
ஈடுபட்டிருந்த போது அவ்விரு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டன.


Pengarang :