ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்கள் அமல்- ஏழ்மையை ஒழிக்கவும் அரசு நடவடிக்கை

உலு சிலாங்கூர், மே 1- ஒற்றுமை அரசின் நோக்கத்திற்கு ஏற்ப சிலாங்கூரில் பரம ஏழ்மையை ஒழிப்பதற்கு  மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டம் (பிங்காஸ்) உள்பட பல்வேறு திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தியுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நாட்டில் பரம ஏழ்மையை முற்றிலும் ஒழிக்கப் போவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூளுரைத்துள்ளார். பரம ஏழ்மையை முற்றிலும் ஒழிக்காவிட்டாலும் சுமார் 88 விழுக்காடு ஒழிப்பதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். 

சில தரப்பினர் இந்த நடவடிக்கையை கேலி செய்தாலும் இது சாத்தியமில்லை என்றாலும் பரம ஏழ்மையை ஒழிப்பதற்கான முயற்சியை நாம் தொடர்வோம் என்று அவர் சொன்னார்.

முன்னதாக அவர், இங்குள்ள உலுயாம் லாமா, தாமான் பத்து 30 குடியிருப்பு பகுதியில் தன் கணவரை இழந்த சபியா மாசான் வீட்டில் நடைபெற்ற யாசின் வாசிப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காடீர், லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் சைட் அகமது அப்துல் ரஹ்மான் அல்ஹாடாட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சிலாங்கூரில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதோடு இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான  நடவடிக்கைகளை மாநில அரசு சிறப்பான முறையில் மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜனவரி மாதம் கூறியிருந்தார்.

நாட்டின் வருமானம் சிறப்பான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருவதன் அடிப்படையில் இந்த பரம ஏழ்மை பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என அவர் சொன்னார்.


Pengarang :